Thursday, December 20, 2007

இவனுங்க திருந்தவே மாட்டானுங்க

டீ.வியில் "குரு" படம் ஓடிக்கொண்டிருந்தது. "நான் வணங்குகிறேன்...சபையிலே" - துணிப் பஞ்சத்தில் அடிப்பட்ட ஸ்ரீதேவி ஆடுகிற குத்தாட்டத்துக்கு என்னம்மோ பரதநாட்டியம் மாதிரி நடராஜர் சிலையெல்லாம் வைத்திருந்தார்கள். நடராஜர் கையில் இருக்கிற உடுக்கையை கீழே வைத்துவிட்டு கண்ணைப் பொத்திக்கொள்ளாமல், என்னை மாதிரி நைஸா ஜல்சா டேன்ஸ் பார்த்துக்கொண்டிருந்தார்.

சாய்பாபா மாதிரி முடியை வைத்துக்கொண்டு ஒரு வில்லன் ஜன்னலிலிருந்து துப்பாக்கியால் கமலை குறிவைத்துக் கொண்டிருந்தான். ஸ்ரீதேவி பூவெல்லாம் நடராஜர் மேல் போட.. நடராஜர் இப்பவும் கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாமல் கண்ணை பொத்திக் கொள்ளாமல் கவுண்டமணி மாதிரி "ஹ.. லெப்ட்ல பூசு ஹ...ரைட்டுல பூசு இங்க பார் இங்க பூசு"ன்னு போஸ் குடுத்துக் கொண்டிருந்தார்.

நடராஜரே கண்ணை முடிக்கவில்லை...இந்தப் படத்தை பதினைந்து வருஷத்துக்கு முன்னாடி பார்த்த போது நான் எதுக்காக கண்ணை மூடிக்கொண்டேன் என்று இப்ப வருத்தமாக இருந்தது.

"மாடியில குழந்தை குளிச்சிண்டு இருக்கா துண்டு எடுத்துக் குடுத்துட்டு வாங்க" அடுக்களையில் இருந்து குரல் வந்தது. அதானே...அதெல்லாம் கரெக்டாக மூக்கில வேர்த்திரும்.

ஸ்ரீதேவியைப் (இப்ப) பிடிக்காவிட்டாலும் பாட்டு நல்ல பாட்டே என்று கேட்டுக் கொண்டிருந்தேன். "ஒரு நிமிஷம் இரும்மா...நானே இங்க கணக்கு டேலியாகாம மணடைய பிச்சிக்கிட்டு இருக்கேன்.." என்ன கணக்குன்னு அடுத்து குடைச்சல் கேள்வி வராது என்ற நம்பிக்கையில் அடிச்சிவிட்டேன். மனுஷனுக்கு வாழ்க்கையில் நம்பிக்கை ரொம்ப முக்கியம்ன்னு சுவாமி சுகபோதானந்தா சொல்லியிருக்கிறார். உண்மையிலேயே கணக்கு குழப்பத்திலிருப்பவன் மாதிரி குரல் குடுத்ததால் இரண்டு நிமிடம் தாக்குப்பிடித்தது. ஆனால் இரண்டே நிமிடம் தான்...பாட்டு நாலரை நிமிடம். ஸ்ரீதேவி இன்னும் எனர்ஜி லெவெல் குறையாமல் ஆடிக்கொண்டிருந்தார். பாட்டும் நல்ல பாட்டு வேற.

"இப்ப என்ன கணக்கு?" வந்தே விட்டாள். பெண்களுக்கு பொறுமை இல்லை என்று எந்த மஹானுபாவர் கண்டுபிடித்தார்? கைக்கு கிடைத்த மகளின் ஹோம்வொர்க்கை கையில் திணித்து விட்டு..."எல்லாம் கரெக்டாக செஞ்சிருக்கான்னு பாரு...மேத்ஸ்ல இந்த தரம் எப்படியும் சென்டம் வாங்க வைச்சிரனும்...போன தரம் மாதிரி கோட்டை விட்டுரக்கூடாது என்ன.. அதான் டேலி பண்ணிகிட்டு இருக்கேன்...கவனமா எல்லாம் கரெக்டா இருக்கான்னு பாரு" துண்டெடுக்க நாலு கால் பாய்ச்சலில் மாடிக்கு போயேவிட்டேன். இல்லாவிட்டால் கணக்கு கணக்குன்னு ஸ்ரீதேவியக கணக்கு பண்றேன் என்று தவறாக அனர்த்தம் ஆகிவிடும் பாருங்கள் அதான்.

கிறுக்குப் பயலுங்க...இந்தப் படமெல்லாம் இப்பத் தான் போடுவானுங்க...ராத்திரி தேவுடு காத்திட்டு உட்கார்ந்திருந்தா "கும்பமேளா"ன்னு கஞ்சா அடிக்கிற சாமியார்களைப் பற்றி டாக்குமென்டரி போடுவானுங்க. இடியட் பாக்ஸுன்னு சும்மாவா பேருவைச்சிருக்காங்க.

"இங்க வா என்ன அவசரம்..?...பாரு தலையெல்லாம் இன்னும் ஈரமா இருக்கு...நல்ல துவட்டு ஜலதோஷம் பிடிச்சிக்கும்" - கீழே இந்நேரம் கண்டுபிடித்தாகியிருக்கும். உடனே போய் மாட்டிக்கிறதுக்கு நான் என்ன மெகா சீரியல் புருஷனா. "...என்ன துவட்டியிருக்க...நல்ல ஈரம் போகவேணாமா...அந்த ஹேர்டிரையர எடு...போட்டுவிடறேன்"

"சாப்பாடு ரெடி டயமாச்சு...கீழவாங்க ரெண்டு பேரும்" சவுண்டு விடறது எனக்குத் தான். வீரனுக்கு இதெல்லாம் அழகில்லை..."சரி வா கீழ போய் சாப்பிடலாம்"

"என்ன சாப்பாடு சாப்பிடற...? ஊர்ல எல்லாரும் தென்னாலிராமன் குதிரை வளர்த்த மாதிரி வளர்த்திருக்கான்னு சொல்றாங்க...இங்க வா நான் ஊட்டிவிடறேன்...என்ன சாதம் போட்டிருக்க குழந்தைக்கு...கூட கொஞ்சம் போடு " எதிராளி அடி போடறதுக்கு டயமே குடுக்கக் கூடாது நாம் முதல் அடி போட்டுறனும் புதுப்பேட்டையில் செல்வராகவன் சொல்லியிருக்கார்.

"நல்ல காய்கறியெல்லாம் சாப்பிடனும். அதான் ஹெல்தி. யோகா சொல்லித் தரேன் அப்பா புக்குல நிறைய படிச்சிருக்கேன்...முதல்ல பிரீதிங் எக்ஸர்சைஸ்...அப்புறம்..."

"இன்னும் கூட கிழியும் காது தடுக்கும்.." பாட்டு அடுக்களையிலிருந்து வந்தாலும் மெசேஜ் எனக்குத் தான். கண்டுக்கவே கூடாது. இருக்கானோ இல்லையோ ஸ்கீரினப் பார்த்து "என்கிட்ட வம்பு வைசுக்காதேன்னு..அப்புறம் அதாகிடுவ இதாகிடுவன்னு" ஹீரோக்கள்லாம் சவுண்டு குடுக்கற மாதிரி எதாவது உளறிக்கிட்டே இருக்கனும். இல்ல எதிராளி சுதாரிச்சிக்குவாங்க.

சானல் சிபிபீஸ்க்கு மாறியிருந்தது. டெலிடப்பீஸ் லூஸு மாதிரி கெக்கபிக்கன்னு சிரித்துக் கொண்டிருந்தது. சதிலீலாவதி எங்க சித்தப்பா பொண்ணு தான்னு பண்ற சதி இது. நாம சேனல திருப்பி மாத்தி நம்மை மறந்து பார்த்துகிட்டு இருப்போம்..வந்து கையும் கள்வுமா மாட்டலாம்ன்னு சதி. "எந்தன் கண்ணில் ஏழுலகங்கள்.." பாட்டு கூட நல்லா குன்ஸா தான் இருக்கும். பாட்டு ஆரம்பிச்சிருக்கும் இந்நேரம். மனுஷனுக்கு சகிப்புத் தன்மை ரொம்ப முக்கியம். பிரித்விராஜ் வரும் போது நாங்க இந்த அராஜகமா பண்றோம். இல்ல சித்தார்த் வரும் போது சேனல மாத்துரோமா? எக்கேடும் கெட்டுப் போறான்னு பக்கத்துல இருக்கிற ஜெனிலியாவை பார்த்துகிட்டே சகிப்புத் தன்மை காட்டலையா?

இதாவது பரவாயில்ல ...என்ன ரசனைப்பா...மனுஷனுக்கு ரசனை ரொம்ப முக்கியம். வயசான ஹாலிவுட் தாத்தாக்களையெல்லம் பார்த்து ஜொள்ளுவிட்டுக்கிட்டு....ஜார்ஜ் க்ளூனி, ஷான் கானெரி...ஏன் அவங்க தாத்தாவை ஏன் விட்டுட்டீங்க...? நாங்க மனோரமாவைப் பார்த்து ஜொள்ளு விடறோமா?..அப்பிடி ஒரு கபோதிய மட்டும் என் கண்ணுல காட்டச் சொல்லுங்க.......ரசனை..ரசனை..மனுஷனுக்கு...ரொம்ப முக்கியம்.

"என்ன முனுமுனுப்பு??...சேனல மாத்தனும் போல இருக்குமே...?"

"சே...சே...என் ரசனைய பத்தி என்ன நினைச்சிகிட்டு இருக்க?....உங்கள மாதிரியா ..ஏதோ சூர்யானா கூட ஒத்துக்கலாம்..."

"என்னிக்கு நீங்க சுற்றும் விழிச் சுடரேக்கு ஆடிக் காட்டினீங்களோ அன்னிக்கிலெர்ந்து எனக்கு அவன பிடிக்காம போயிடிச்சு..."

"ஹ...அதெல்லாம் இல்ல...நீங்களெல்லாம் ஓவரா வழிஞ்ச வழிசல்ல மவனே ஒற்றே படம்...அப்படியே ஓய்ஞ்சு போயிட்டான்...இப்ப பாரு விளக்கெண்ணை ஊத்தினா இப்படி எரியும் மண்னெண்ணை ஊத்தினா அப்பிடி எரியும்ன்னு பஸ்ஸடாண்டு பக்கம் பெட்டர்மாஸ்க் விளக்கு வைச்சு லேகியம் விக்கிறவன் மாதிரி டயலாக் பேசிக்கிட்டு திரியறான்".

"இங்க மட்டும் என்ன வாழுதாம்...மீரா ஜாஸ்மினாவது என்ன ஆச்சு?...மல்லிகா கபூர்...அந்த ஒரு படத்துக்கு அப்புறம் தமிழ்ல படத்தையே காணோம்..." இன்னும் பல பெயர்கள் வர ஆரம்பித்தன.

"மனுஷன் கொஞ்சம் நிம்மதியா சாப்பிடட்டுமா...காலைலேர்ந்து பசி உயிரப் போகுது..." வீரம்னா என்ன தெரியுமா பயப்படாத மாதிரி நடிக்கத் தெரிவது குருதிப்புனல்ல தலைவர் சொல்லியிருக்கார்.

ஆய்ஞ்சு ஓய்ஞ்சு கிடைச்ச கேப்ல ரிமோட உஷார் பண்ணி சேனல மாத்தினா....நம்பியார் குழல் புட்டு செய்யற கேனை கையில மாட்டிக்கிட்டு.."மைக் மைக்"ன்னு மைக்கே இல்லாம...பிளாக் அண்ட் ஒயிட் டீவியில சாய்பாபா வில்லன் கமலை காரில் துரத்துவதை பார்த்துக் கொண்டு ரன்னிங் கமெண்ட்ரி குடுத்துக்கிட்டு இருக்கார். கூட இருக்கிற நடிகை வேற ஓவரா ரியாக்ஷன் காட்டுது.

இனிமே சண்டைக் காட்சி தான். தூ இதெல்லாம் ஒரு படமான்னு டீ.வியை அணைத்துவிட்டேன். இவனுங்க திருந்தவே மாட்டனுங்க...

Tuesday, December 11, 2007

சேலஞ்ச் - நன்றி

என்னாடா சேலெஞ்ச்ன்னு சொல்லி ஓட்டெல்லாம் போடச்சொல்லிட்டு வெற்றி பெற்ற வேட்பாளர் மாதிரி எஸ்ஸாகிட்டானேன்னு நினைச்சிருப்பீங்க. ஆபிஸ் வேலை பின்னுதுங்க. மெயில் கூட பார்க்கமுடியலை.அது ஒரு பக்கம் இருக்கட்டும், ஸ்கூல் எக்ஸாம்க்கு படிக்கும் போது ஒரு மாசத்துக்கு முன்னாடியே புல்ஸேக்ப் பேப்பர்ல தேதியெல்லாம் போட்டு படிக்கறதுக்கு பளானெலாம் போட்டு, அதையெல்லாம் நாளைக்கு நாளைக்குன்னு அப்பிடியே கேரி பார்வர்ட் செய்து, எக்ஸாமுக்கு முந்தின நாள் ராத்திரி படிக்க ஆரம்பித்து ஹாலுக்குள்ள போகும் வரை படித்து சில முக்கிய கொஸ்டின்களை சாய்ஸில் விட்டுக்கலாம்ன்னு நினைத்துப் போனால், நாம சாய்ஸ்ல விட்ட கேள்விகளெல்லாம் ஒரெ ஆப்ஷன் சாய்ஸில் வரும். அது மாதிரி நான் சாய்ஸில் போயிடும் என்று மசாலாவுக்காக சேர்த்த கஷ்டமான ரெண்டு ஆப்ஷன்களை அதிக வோட்டு போட்டு குடுத்திருக்கிறீர்கள். வோட்டு போட்ட அத்தனை சனத்துக்கும் கோடானு கோடி நன்றியைய்யா !!

இதெல்லாம் இந்த மூஞ்சிக்கு தேவையான்னு அனானி கமெண்ட் வரும் என்று நினைத்தேன். ஆனால் ஓட்டு போட்டு பழி வாங்கிவிட்டார்கள் என்று நினைக்கிறேன். ஏஞ்ஜலினா ஜோலி எந்த ஊரில் இருக்கிறார் என்பது கூட தெரியாது. பிராட் பிட் நடித்த ட்ராய் படம் பார்த்திருக்கிறேன். தொடையெல்லாம் கும்முன்னு காட்டிக்கொண்டு சண்டையில் பின்னிப் பெடலெடுப்பார். அதே உதறலாய் இருக்கிறது. கனவில் ஏஞ்ஜலினா ஜோலி வருவதை விட பிராட் பிட் தான் அதிகம் வருகிறார் (அவர் உதைப்பது மாதிரி கனவுய்யா...ஓ...அவனா நீயிய்யுன்னுலாம் கேக்காதீங்கப்பூ..என் கவலை எனக்கு :)).

படத்துல நடிக்கிறதப் பத்தி என்ன சொல்ல...அது எனக்கு தண்டனையா இல்ல உங்களுக்கு தண்டனையான்னு என்னால நிச்சியமா சொல்ல முடியலை :)) ஆடுமாடு அண்ணாச்சி உங்களத் தான் மலைபோல நம்பியிருக்கேன்...கைவிட்டுறாதீக...

ஏஞ்ஜலினா ஜோலி ஆப்ஷனுக்கு கள்ள வோட்டு போட்ட அருள் தவிர உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி.

இந்த சேலஞ்சுகளை 2009 புதுவருட பிறப்புக்குள் செய்து முடிக்கப் பார்க்கிறேன். ஏஞ்ஜலினா அம்பாள் அருள் புரியட்டும்.

Tuesday, November 27, 2007

அம்மா அப்புறம் சினிமா

உங்கள் வருங்கால சந்ததியினருக்கு எந்த தமிழ் சினிமா படங்களைப் பார்க்கும் படி சிபாரிசு செய்வீர்கள் என்று ஒரு தொடர் பதிவை சாம்பார் வடை ஆரம்பித்து நம்மையும் இழுத்து போட்டுவிட்டார்.

ஏற்கனவே என் மகள்கள் பார்க்கவேண்டும் என்று நான் விரும்பும் ஒரு கலக்க்ஷனை வைத்திருக்கிறேன்.இந்த லிஸ்ட்டில் இருக்கும் சில படங்களை இன்னும் தேத்திக் கொண்டிருக்கிறேன்.இதில் சில படங்கள் என் மூத்த மகளுக்கும் பிடிக்கும்.

நெஞ்சைத் தொட்டு உண்மையைச் சொல்லவேண்டுமென்றால் இந்த மாதிரி கலெக்க்ஷன் வைத்துக்கொள்ளவேண்டும் என்ற எனது ஆர்வத்தை தூண்டிய படம் ஆங்கிலப் படம் "லார்ட் ஆஃப் த ரிங்ஸ்". அதுவரை நல்ல படங்களை பார்த்து சிலாகித்தாலும் துட்டு குடுத்து வாங்கி அலமாரியில் பூட்டி வைத்துக்கொள்ளவேண்டும் என்றெல்லாம் தோன்றியதே இல்லை. இந்தப் படத்தைப் பற்றி சில நெருங்கிய வட்டத்தில் மணிக்கணக்கில் ஃபோனில் ப்ளேடு போட்டிருக்கிறேன். சாம்பார்வடை தமிழ் படங்கள் என்று கறாராய் சொல்லிவிட்டதால் எனது லிஸ்டில் இருக்கும் இந்த ஒரே ஆங்கிலப் படத்தை சேர்த்துக் கொள்ளவில்லை.

1. "உன்னால் முடியும் தம்பி" - இந்தப் படம் மசாலா படமாய் இருக்கலாம், லொட்டு லொசுக்கு என்று குற்றங்கள் இருக்கலாம், எல்லாவற்றையும் தாண்டி "உதயமூர்த்தி" பார்த்த மாத்திரத்தில் நாடி நரம்புகளில் ஜிவ்வென்று ஏறிவிட்டார். அதற்கு படமெடுத்த /கதை சொன்ன விதமும் காரணமாய் இருக்கலாம். "உன்னால் முடியும் தம்பி" எனக்குப் பிடித்த தாரக மந்திரமாகிவிட்டது. கமல் ரசிகனாய் ஆனதிற்கு மிக முக்கியமான காரணங்களில் இந்தப் படமும் ஒன்று. இந்தக் படத்தின் கதை எனக்கு மிகப் பிடித்தமான ஒன்று.

2. "சலங்கை ஒலி" - ஒரு மிகச்சிறந்த படம் என்ற காரணத்துக்காக நான் கலக்க்ஷணில் வைத்துக்கொண்டிருந்தாலும், அதெல்லாம் சும்மா சால்ஜாப்பு, ஜெயப்பிரதாவுக்காகத் தான் கலெக்க்ஷனில் இருக்கிறது என்று தங்கமணி ஆணித்தரமாக நம்புகிறார்.(இருக்கலாம் :) ) ஒரு படம் எப்படி எடுக்கவேண்டும் என்று நிறைய காட்சிகளில் இந்தப் படத்தில் பாடம் இருப்பதாக நான் நம்புகிறேன். பிண்ணனி இசை என்பது ஒரு படத்திற்கு எவ்வளவு பலம் என்பது இந்தப் படத்தில் பார்க்கலாம். இளையராஜா புகுந்து விளையாடி இருப்பார். கமல் அகில இந்திய விழாவில் ஆடப் போகிறார் என்பதை அவருக்கும் தெரிவிக்கும் காட்சி ஒன்று போதும் இந்த படத்திற்கு! கமல், ஜெயப்பிரதா, இளையராஜா, கே.விஷ்வநாத் நாலு பேரையும் ஒருபோல நிறக வைத்து காலில் விழலாம். நாத விநோதங்கள் பாட்டுக்கு ஆடுவதற்கு நானும் நாலு வருஷமாய் முயற்சி செய்துகொண்டிருக்கிறேன், வீட்டில் அம்மாவும் பெண்களும் விழுந்து விழுந்து சிரித்துக்கொண்டிருக்கிறார்கள்.

3.காதலிக்க நேரமில்லை - வீட்டில் எதாவது விசேஷத்திற்கு ஊரில் இருந்து எல்லாரும் வந்திருப்பார்கள். விஷேசம் முடிந்த அன்று வேலை செய்து களைப்பாக இருப்பார்கள். ராத்திரி சாப்பாடு, அரட்டைக் கச்சேரி முடிந்த பிறகு சேர்ந்து உட்கார்ந்து டீ.வியில் பார்ப்பதற்க்கு சூப்பர் படம். இந்தப் படத்திலிருந்து பாலைய்யாவின் காமெடிக்கு பெரும் ரசிகனாக ஆகிவிட்டேன். (அவர் பார்ப்பதற்கு எங்க தாத்தா ஜாடையில் வேறு இருப்பார்) மனுஷன் என்னம்மா கலக்குவார். படத்தில் அந்தக்கால தொய்வுகள் சில இருக்கும் என்றாலும் அதையெல்லாம் தாண்டி கண ஜோராய் இருக்கும். இந்தப் படம் பார்க்கும் போது இந்தக் காலத்தில் நாமும் இருந்திருக்க மாட்டோமா என்று ஒரு ஏக்கம் வரும். ரவிச்சந்திரன் செம ஸ்மார்ட்டாக இருப்பார்.

4.திருவிளையாடல் - ஏ.பி.நாகராஜனுக்கு நிறைய கடமைப் பட்டிருக்கிறோம். இந்த மாதிரி கதைகள் இருப்பதால் சில புராணக் கதைகளை சொல்ல மிக எளிதாக இருக்கிறது. இந்தப் படம் அதற்க்காக மட்டுமில்லை- எனக்கு சின்ன வயதிலும் இப்போதும் மிகவும் பிடிக்கும் படம். இப்பொது டெக்னாலஜி வந்ததற்கப்புறம் சில விஷயங்கள் அல்பமாக தோன்றினாலும் இந்தப் படம் நான் சின்னவயதில் பார்த்த போது, பிரம்மாண்டத்தில் மிரண்டு போயிருக்கிறேன். எத்தனையோ உம்மாச்சி படங்கள் வந்தாலும் இந்தப் படம் தான் அவற்றில் எல்லாம் டாப். இந்தப் படத்தின் ஆடியோ கேசட்டைக் கூட எங்காவது கல்யாணமண்டபத்தில் ஸ்பீக்கரில் ஒலிபரப்ப்பிக் கொண்டிருந்தாலும் வெட்கமே படாமல் நின்று கேட்டிருக்கிறேன். "டுர்ர்ரிங்ங்ங்ங்ங்" என்று காட்சி மாறுவதை குறிக்கும் இசையுடன் ஆடியோ கேசட் சூப்பராய் இருக்கும். பாடல்கள் எல்லாம் பட்டையைக் கிளப்பும் ரகம். வீட்டில் இந்தப் படமும், சரஸ்வதி சபதமும் மகள்களுக்காக நிறையதடவை போட்டிருக்கிறோம். இந்த வயதில் வசனங்கள் புரியாமல் பெரும்பாலும் பாதியிலேயே தூங்கிவிடுவார்கள், நான் மட்டும் முழு படத்தையும் உட்கார்ந்து பார்ப்பேன். தங்கமணி தொந்தரவில்லாமல் கம்ப்யூட்டர் பார்ககவேண்டுமானால் இந்தப் படத்தை போட்டு என்னை உட்காரவைத்துவிட்டு நைஸாக நழுவிவிடுவார்.

5.தில்லுமுல்லு - ரஜினியின் சிறந்த படம் என்று நான் நினைப்பது. கலக்கி எடுத்திருப்பார். பாலசந்தரின் சில இம்சைகளை தவிர்த்து பார்த்தோம் என்றால் சிரித்து மகிழ அற்புதமான படம். படத்தில் வரும் கதாபாத்திரங்கள் செய்யும் தில்லாலங்கடி வேலைகள் கலக்கலாய் இருக்கும். ரஜினியின் அலட்டில்லாத நடிப்பு பார்க்கும் போது மனுஷனை இமேஜ் வலையில் பூட்டி அற்புதமான நடிகனை சாகடிச்சிட்டாங்களோன்னு வருத்தமாய் இருக்கும்.

6. பைவ் ஸ்டார் - படம் மிகப் பிரமாதமான படமாய் இல்லாமல் இருக்கலாம் ஆனால் இந்த படத்தில் வரும் நட்பு எனக்கு ரொம்ப பிடிக்கும். என்ன படமென்றே தெரியாமல் பார்த்து ரொம்ப பிடித்த படம். கல்யாணமான பிறகும் நட்பு தொடர்கிறது அதுவும் மூன்று ஆண்கள் இரண்டு பெண்கள் காம்பினேஷன் கலக்கலாய் இருக்கும். இதில் அவர்களுடைய கணவர்களும் மனைவிகளும் சேர்ந்து கொள்வது அற்புதமாய் இருக்கும். ஒரு ஃபீல் குட் ரக படம்.

7. வேல் / அழகிய தமிழ் மகன் - புளித்துப் போன தோசைமாவில் ரெண்டு தேக்கரண்டி வினீகர் விட்டு, சோடா உப்பு போட்டு, முட்டைக்கோசு வெந்த தண்ணீர் விட்டு கலந்து, வென்னிலா எஸ்ஸென்ஸ் சேர்த்து உப்பு போட்டாமல் போண்டா போட்டால் எப்படி கேவலமாய் வரும் என்பதை செய்யாமல், சாமான்களை வேஸ்ட் செய்யாமல் தெரிந்துகொள்ளவேண்டுமானால் இந்தப் படங்களைப் பார்க்கலாம்.


மனதில் சட்டென்று தோன்றியவற்றை பதிந்திருக்கிறேன். நான் ரொம்ப விரும்பும் சில படங்கள் விட்டுப் போயிருக்கலாம்...நினைவு வந்தால் பின்னூட்டத்தில் சேர்க்கிறேன்.

உங்களுக்கும் இந்த லிஸ்ட் போட ஆசையாயிருந்தால் பிடியுங்கள் என் அழைப்பை...பதியுங்கள் படிக்க ஆர்வமாய் இருக்கிறேன்.

Wednesday, November 21, 2007

சேலஞ்ச் டுபுக்கு

இவனுக்கு வேற வேலையே இல்லைப்பா
இதெல்லாம் சும்மா...பப்ளிசிட்டி ஸ்டண்ட்
வேஸ்ட் ஃபெல்லோப்பா இவன்
இந்த மாதிரி அறிக்கைவிட்டு ஹிட் கவுண்ட ஏத்த பாக்குறான்
கொங்ய்யால...கேடிப்பயடா இவன்...மத்தபடி சேரிட்டின்னு சொல்லி இவனும் பப்ளிசிட்டி தேடிக்கிறான்
பார்போமே சொல்றத செய்யறானான்னு ..இல்லைன்னா முகத்த எங்க கொண்டு வைச்சுக்கறான்னு பார்க்கத்தானே போறோம்.


இந்தப் பதிவை படித்துவிட்டு இப்படியெல்லாம் உங்களுக்கு என்னைப் பற்றி தோன்றலாம். தோன்றினால் தாராளமாக திட்டலாம் தவறே இல்லை. பெரும்பாலானவை அப்பட்டமான உண்மைகளாக இருக்கலாம்.

நயன் தாரா திரும்பவும் ஸ்லிம்மாகியாச்சே அமைச்சரவையில் சான்ஸ் குடுக்கலாமா, "மீ" நடிகைக்கு "மா"ன்னாவோட கல்யாணமாயனமாமே...உண்மையாயிருக்குமா? என்ற சமூக சிந்தனைகள் போக மிச்சம் இருந்த சொச்ச நேரத்தில் வாழ்க்கையை சுவையாக்க (இன்ட்ரெஸ்டிங்காக்க) வெள்ளைக்காரார்கள் கையாளும் சில யுக்திகளைப்பற்றி யோசித்துக்கொண்டிருந்தேன். எனக்குத் தெரிந்து நம்மூரில் எட்டு வருடங்கள் முன் வரை இந்த சேரிட்டி ஃபண்ட் ரெய்சிங் ரொம்ப பிரபலமில்லை. தீபாவளி நேரத்தில் க்ரூப் ஃபோட்டோவுடன் குமுதம், விகடனில் வரும் உதவும் கரங்கள் ஒரு பக்க அட்வர்டைஸ்மண்டை தவிர எதுவும் பார்த்த நியாபகமில்லை. நல்ல மனதுள்ளவர்கள் அவர்கள் நண்பர்களுடன் சேர்ந்து டொனேஷன் குடுப்பார்கள்.

வெளிநாடுகளில் இந்த மாதிரி சேரிட்டிக்காக பணம் சேர்ப்பதை கொஞ்சம் சுவையாக செய்கிறார்கள். தன்னார்வலர்கள் (ஹப்பாடா நானும் சுத்த தமிழ்ல ஒரு வார்த்தை போட்டாச்சு) எதாவது ஒரு சவாலை ஏற்றுக்கொண்டு அதைச் சொல்லி பணம் சேர்ப்பார்கள். உதாரணத்துக்கு நான் இந்த சேரிட்டிக்காக லண்டண் மராத்தனில் ஓடுகிறேன், நான் ஓடி முடித்தால் நீங்கள் இந்த சேரிட்டிக்கு உங்களால் எவ்வளவு முடியுமோ அதை தருவேன் என்று உறுதி செய்யலாம்(ப்ளெட்ஜ்) என்பது போல. எங்க ஆபீஸில் வித்தியாசமாக செய்கிறேன் பேர்வழி என்று ஏழு பேர் கொண்ட வெள்ளைக்கார கும்பல் ஒன்று இந்த சேரிட்டிக்காக நாங்கள் இரண்டு மாத்த்திற்கு மீசை வளர்க்கிறோம் உங்களால் முடிந்ததைத் தாருங்கள் என்று ஏகப்பட்ட கலாட்டா செய்தார்கள். இதில் ஏற்கனவே ஆப்பிஸில் மீசை உள்ள ஒரே ஆள் நான் மட்டும் தான். நானும் இந்த சேரிட்டியில் இருக்கிறேன் என்று நினைத்த ஆட்களும் உண்டு. கடைசி நாள் ஆபிஸ் விழாவில் இவர்கள் மைக்கில் மீசை வைப்பதில் உள்ள கஷ்டங்களை(??!!) பகிர்ந்து கொண்டார்கள். இதில் சில மூதேவிகள் மைக் கிடைத்ததே என்று ஆபாசமாய் போய் என்னம்மோ டிரிப்பிள் எக்ஸ் படங்களில் நடிப்பவர்கள் தான் மீசை வைத்துக்கொள்வார்கள் என்கிற ரீதியில் கதாகாலேட்சேபம் பண்ணிவிட்டு போய்விட்டார்கள். அதிலிருந்து ஆபிஸிலிருக்கும் சில பெண்கள் என்னை எப்போ பார்தாலும் ஒரு நமுட்டு சிரிப்பு சிரிப்பதாக எனக்குத் தோன்றும். "அடி சண்டாளி...எனக்கு இந்த படியிலேர்ந்து இறங்கற நடிப்பைத்தவிர எதுவும் தெரியாது" என்று சொல்லிவிடலாமா என்று வாய் நமநமக்கும்.

சரி விஷயத்துக்கு வருகிறேன். சரி வாழ்க்கையில் ஏதாவது சுவாரசியமாய் செய்யலாமே, அதையும் எதாவது ஒரு நல்ல காரியத்துடன் இணைத்து செய்யலாமே என்று சில நாளாய் யோசித்துக் கொண்டிருந்தேன். ஐந்து சவால்கள் தோன்றின. இதை மேலும் சுவையாக்க அதில் மூன்றை எடுத்துக் கொண்டு ஒரு வருடத்துக்குள் நிறைவேற்றலாம் என்று ஒரு எண்ணம். இந்த மூன்றில் ஒன்று என்னுடைய சாய்ஸாக அல்ரெடி செலெக்ட் செய்துவிட்டேன்.

மீதி இரண்டை உங்கள் வோட்டுக்கு விட்டு இருக்கிறேன். மேலே சேர்த்திருக்கும் தேர்தல் பொட்டியில் இருந்து எனக்காக ஒன்றை டிசம்பர் இரண்டாம் தேதிக்குள் தேர்ந்தெடுங்கள். (ஒருத்தருமே வோட்டு போடலைன்னா நானே கள்ளவோட்டு போட்டு ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுத்துவிடுவேன்) அதிக வோட்டுக்க்ள் பெறும் இரண்டை நான் சவாலாக எடுத்துக்கொள்கிறேன். நான் ஏற்கனவே எடுத்துக் கொண்டிருக்கும் ஒரு சவாலோடு சேர்த்து எடுத்துக்கொள்ளும் மூன்று சவால்களையும் நான் முடிக்கும் பட்சத்தில் நீங்களும் என்னுடன் சேர்ந்து சேரிட்டிக்கு எதாவது பணம் தர விரும்பினால் அதையும் எனக்கு தெரியப் படுத்தலாம்.(கட்டாயமில்லை) இது போக நானும் ஓவ்வொரு சவாலுக்கும் இவ்வளவு என்று ஒரு தொகையை ஒதுக்கி இருக்கிறேன். சவால்கள் கடுமையானதாக இருக்குமென்று நான் நம்புவதாலும், நான் இருக்கும் இடம் கருதியும் ஒரு வருடத்திற்குள் முடிக்கப் பார்க்கலாம் என்று இருக்கிறேன். விபரங்கள் அடுத்த பதிவில். இதெல்லாம் கிடையாது நான்வுடறேன்டா சவால்ன்னு குரல் குடுத்தாலும் பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம். என் உடம்பு எவ்வளவு அடிவாங்க முடியும் என்பதை கணக்கில் கொண்டு ஒரு வேளை அந்த சவாலையும் நான் எடுத்துக்கொள்ளலாம். ரெடி ஸ்டார்ட் மீஜிக்.

Thursday, November 15, 2007

ப்ளாக் பார் டம்மீஸ்

ஐல் ஆஃப் வைட் சென்றிருந்த போது வந்த நண்பரை சமீபத்தில் சந்தித்தேன். ஐல் ஆஃப் வைட் பிரயாணத்தின் போது தான் நண்பர் அறிமுகம். அந்த மூன்று நாள் கேம்பில் மொத்தம் இருந்த ஒன்பது பேரில் மூன்று பேர் வலைப்பதிவர்கள். நாங்கள் மூவரும் அவ்வப்போது வலைப்பதிவுகள் பற்றி பேசி (மற்றவர்களை கடுப்பேத்திக்) கொண்டிருந்தோம்.

சமீபத்தில் நண்பரைச் சந்தித்த போது இன்னொரு நண்பரும் கூட இருந்தார். இந்த இன்னொரு நண்பர் கொஞ்சம் அப்பிராணி சமீபத்தில் தான் இந்தியாவிலிருந்து வந்திருக்கிறார் என்பதால் அப்படி ஆக்ட் கொடுத்துக்கொண்டிருக்கிறார்.

"அப்புறம் டுபுக்கு சொல்லுங்க உங்க ப்ளாக் வேலையெல்லாம் எப்படி போயிட்டிருக்கு?"

"ஏதோ உங்க புண்யத்தில ஓடிக்கிட்டு இருக்கு"

"ப்ளாக்ன்னா என்னாங்க?"- இன்னொரு நண்பர்க்கு ப்ளாக் பரிச்சியமில்லை.

"அவர் சொல்றத விட நான் சொல்றேன்" என்று ஆரம்பித்தார் நண்பர்.

"முன்னாடியெல்லாம் இந்த ஐ.டி பசங்க வெட்டிக்கா சம்பளம் வாங்கிட்டு மெயில்- சாட் போக, பிரெண்ட்ஷிப் டே, அம்மாவாசை டே, பௌர்ணமி டேன்னு உலகத்துல இருக்கிற உருப்படாத 'டே'க்கெல்லாம் ஒரு நாய்க்குட்டி படமொ, பூனைக்குட்டி படமோ போட்டு க்ராபிக்ஸ் வேலையெல்லாம் காட்டி செண்டி தாக்கி, என்ன மாதிரி நீயும் வெட்டியா இருந்தா இத இன்னும் பத்து வெட்டிங்களுக்கு அனுப்புன்னு இல்லைன்னா இன்னும் பட்து நாளைக்குள்ள மென்னியப் பிடிக்கிற மாதிரி ஆணி பிடுங்கற வேலை வந்திரும்ன்னு மிரட்டி மெயில் தட்டி விடுவாங்க, இதுல எவனோ ஆரம்பிச்சுவைச்ச ஐடியா ப்ளாக்"

"ஓசில குடுக்கறானேன்னு இவனுங்களா தலைக்கு ரெண்டு மூனு பளாக் ஆரம்பிச்சு அதுல கன்னா பின்னான்னு தோணினதையெல்லாம் எழுதுவாங்க"

"என்னத்த பத்தி எழுதுவாங்க?"

"எல்லாத்தையும் பத்தி தான். ஜார்ஜ் புஷ்ஷே மன்னிப்பு கேள் என்பதில் தொடங்கி, ஐ.நா சபை அடுத்து செய்யவேண்டிய பத்து விஷயங்கள் வரை எல்லாத்தையும் கவர் செஞ்சிருவாங்க. இதுல நடுநடுவில கதை கருமாந்திரம், வெங்காயம் போடாமல் வெங்காய பக்கோடா செய்வது எப்படி, பின்நவினத்துவமும் பாரிஸ் ஹில்டனும், சிங்கப்பூரில் சூச்சா போன அனுபவம்ன்னு வகை தொகை இல்லாம எழுதுவாங்க"

"ஆஹா பெரிய எழுத்தாளர்கள் ரேஞ்சுன்னு சொல்லுங்க.."

"ஆமாமா அப்பிடித் தான் நினைப்பு இவங்களுக்கெல்லாம். இந்த வெட்டி வேலைய படிச்சிட்டு ஊர்ல இருக்கிற மத்த வெட்டிங்களெல்லாம் "ஆஹா சூப்பர் பிரமாதம் பட்டயைக் கிளப்பிட்டீங்கண்ணே, லவங்கத்தை லவட்டிட்டீங்கண்ணேன்னு இவங்களுக்கு கமெண்டு போடுவாங்க. உடனே இவங்களும் அவங்க வைச்சிருக்கிற ப்ளாக்குக்கு போய் நீங்களும் 'நிக்கிறீங்கண்ணே'ன்னு பதில் மரியாதை செஞ்சிருவாங்க"

"அடடே பரவாயில்லையே.."

"ஆமா இப்படியே இவங்களுக்குள்ளயே ஒருதர ஒருதர் நெஞ்ச நக்கி பதிவர் வட்டம், சதுரம்ன்னு ஒரு க்ரூப் ஃபார்ம் பண்ணிருவாங்க"

"அப்புறம்?"

"அப்புறமென்ன..ஆபிஸ்ல மிச்சப் பொழுதும் போக வேணாமா...அதுக்கு சாதி, மதம், ஆணியம், பெண்ணியம் ,பெருங்காயம்ன்னு ஆரம்பிச்சிருவாங்க. அது அடிதடியாகி போகப் போக வடிவேலுக்கு ஃபோன் வந்த கதையா உங்கம்மா உங்கக்கான்னு போய் படிக்கிறதுக்கே காதப் பொத்திக்க வேண்டியிருக்கும்.."

"ஐய்யையோ ச்சீ ச்சீ...எப்பிடிங்க இதெல்லாம் செய்ய்றாங்க"

"அட நீங்க வேற...இதையெல்லாம் சொந்த பேர்ல செய்யமாட்டாங்க...எதுக்கு ஆபிஸல டெக்னாலஜி இன்வெஸ்ட்மண்ட் பண்ணி சம்பளத்துக்கு உட்கார்த்திருக்கான்...ஆபிஸ் தொழில் நுட்பங்களை எல்லாம் பயன்படுத்தி வெவ்வேறு பெயர்ல, இன்டர்போலே ரூம் போட்டு உட்கார்ந்து யோசிச்சாலும் கண்டுபிடிக்க முடியாத லெவெல்ல் டெக்னாலஜி லெவல் காட்டுவாங்கல்ல.."

"ஓகோ"

"இந்த சண்டையில ஒரே சுருதியில் சிங்கியடிக்கிறவனுங்களெல்லாம் ஒரு க்ரூப் ஃபார்ம் பண்ணிருவாங்க.."

"ம்ம்ம்..அப்புறம்"

"எங்கயாவது போற வழியில ரெண்டு பேர் தெரியாம மோதிக்கிட்டாங்கன்னா...உடனே ஹோட்டலுக்கு போய் போண்டாவோ பஜ்ஜியோ தின்னு கொண்டாடி...அங்கயிருக்கிற கூட்டத்தையும் சேர்த்து கவர் பண்ணி போட்டோ எடுத்து...மாபெரும் வலைபதிவர் மாநாடுன்னு சொல்லி...அதையும் ப்ளாக்ல போட்டிருவாங்க."


"என்ன டுபுக்கு ஒன்னும் சொல்ல மாட்டீங்கிறீங்க...சைலண்ட்டா கேட்டுக்கிட்ருக்கீங்க"

"ஹீ ஹீ நாளைக்கு உங்க புண்யத்துல இதையும் ஒரு போஸ்டா போட்டிருவேன்ல :))"

நணபர் எனக்குத் தெரியாமல் அடக் கருமாந்திரமேன்னு தலையிலடித்துக் கொண்டிருக்கலாம்.

பிகு - நண்பர் சொன்னதோடு நானும் கொஞ்சம் மானே தேனே பொன்மானே போட்டு பாடியிருக்கிறேன் :))

Tuesday, November 06, 2007

காய்ச்சல்

எந்த நேரத்தில் போன பதிவில் காய்ச்சலைப் பற்றி எழுதினேனோ தெரியவில்லை ஒரு வாரமாய் உடம்பு சரியில்லை. காய்ச்சல் அண்ட் ஜலதோஷம். அதான் சொன்ன மாதிரி பதிவு போடமுடியலை. அஜீஸ் டாக்டர் ஆஸ்பத்ரியை நினைத்தாலே காய்ச்சல் வந்துவிடும் போல இருக்கிறது. இப்பொழுது காய்ச்சல் விட்டாயிற்று ஜலதோஷம் மண்டையில் உட்கார்ந்து கொண்டு ஒரே தலைவலி. கம்ப்யூட்டர் மானிட்டரைக் கூட பார்க்கமுடியவில்லை. இந்த மாதிரி தலைவலிக்கெல்லாம் விக்ஸைத் தடவிக்கொண்டு டி.வி.யில் குருவி பாட்டு பாடிக்கொண்டு ஆடும் அண்ணாச்சி நகைக் கடை டேன்ஸ் விளம்பரங்களைப் பார்த்தால் சொஸ்தமாகிவிடும் என்று டி.நகர் ராஜூ டாக்டர் சொன்னாரே என்று பார்த்ததில் தலைவலி கூடியிருக்கிறதே தவிர குறையவில்லை. (கூலிங் க்ளாஸ் போட்டுக்கொண்டு பார்க்கச் சொன்னாரா என்று மறந்து போய்விட்டது)

எல்லாம் வாசிம் கான் வேலையாகத் தான் இருக்கும். வீட்டில் ஒருவர் மாற்றி ஒருவருக்கா வந்து இப்போது கடைசியில் என்னோட முறை. இதுவே எங்க ஊராக இருந்தால் "டாக்டர்ர்ர்ர்ர் எனக்கு காய்ச்சல் மூனு வேளையும் சாப்பிட ரோஸ் கலர் மாத்திரையும், பிட்டியில் பி.12ஒ..பென்சிலினோ போட்டு அனுப்புங்க சார்" என்றால் வாயில் தெர்மாமிட்டரை சொருகி, உட்காரவைத்து, கழுதை வயசுக்கெல்லாம் கைல போட்டா போதும்ன்னு ஒரு குத்து குத்தி வீட்டுக்க அனுப்பிவிடுவார். ஊசி போடாமல் அனுப்பிவிட்டால் மாமா இரண்டு நாள் தான் பொறுப்பார்..அப்புறமும் காய்ச்சல் குறையாவிட்டால் "ஒரு பென்சிலின் போட்ருங்கோ அப்போதான் கேக்கும்" என்று டாக்டருக்கு ப்ராக்ஸி குடுத்து ROI பார்த்துவிடுவார். பீ.12-ஓ வேற எதுவோ ஒரு ஊசி மட்டும் பயங்கரமாக கடுக்கும். அதை மட்டும் இடுப்பில் தான் போடுவார்கள். இது தெரியாமல் பதினோரு வயது பாலகனாய் இருந்தபோது நர்ஸ் நக்க்லடிப்பாரே என்று சட்டையைக் கழட்டி ஓம்க்குச்சி ஸ்வாஸ்னீகர் ஆர்ம்ஸ் காட்டி "எல்லாம் இங்க போட்டா போதும்"ன்னு அடம் பிடிக்க...நர்ஸ் இது எலும்புலலாம் போட முடியாது...கொஞ்சமாவது சதைப் பற்று இருக்கனும்ன்னு அதோட இது வலிக்கும்ன்னு அக்கறையா சொல்ல...அவர் என்னமோ விஜய் மாதிரியும் நான் என்னவோ ரம்பா மாதிரியும் என் இடுப்பிலிருக்கும் மச்சத்தை பார்த்துவிடுவாரோன்னு ஓவராய் அடம் பிடித்து கையில் போட்டுக் கொண்டு....அப்புறம் பிதாமகன் விக்ரம் மாதிரி பல்லைக் கடித்துக்கொண்டு முக்கிக் கொண்டே கர்ஜிக்கிறமாதிரி சவுண்டு விட்டதில் "குழந்தை தேரடியில் எதையோ பார்த்து பயந்திருக்கான்...அதான்..." என்று மாமி முத்தம்மாவைக் கொண்டு வீபூதி போடச்சொல்லி, முத்தம்மா பை ஒன் கெட் ஒன் ஃப்ரீ ஆஃபரில் விபூதி போட்டோதோடு நில்லாமல் ஒரு சொம்பில் தண்ணி வாங்கி மந்திரித்து என் மூஞ்சியில் பொளிச் பொளிச்சென்று ரெண்டு அப்பு அப்பிவிட்டார். அப்புறம் என்னைப் பர்த்தாலே "என்ன அம்பி இந்த தரமும் கைலயே போட்டுருவோமா " என்று நக்கல் விடும் நர்ஸைப் பார்க்கும் போதெல்லாம் முத்தம்மாவுக்கு காசு குடுத்து இவள் முகத்துலையும் ரெண்டு அப்பு அப்பச் சொல்லவேண்டும் என்று வைராக்கியம் பிறக்கும்.

காய்ச்சல் வேளைகளில் மாமவின் மேற்பார்வையில் வயிராற சாப்பிடுவதற்கு மூன்று வேளையும் கடுங்காப்பி தவிர சுத்தமான வெந்நீர் மட்டுமே கிடைக்கும். அவர் குளிக்கப் போயிருக்கும் வேளையில் மாமி நைசாக வெந்நீரில் ஒரு ஸ்பூன் ஹார்லிக்ஸ் போட்டு தருவார். அதையும் குடித்து கொஞ்ச நேரத்தில் வயிற்றைப் புரட்டி வாயிலெடுக்கும் போது மாமா கண்டுபிடித்துவிடுவார். அதனால் தான் காய்ச்சல் குறையவில்லை என்று மாமி அப்புறம் அதையும் நிப்பாட்டி விடுவார். அப்புறம் தெருவில் இருக்கும் கல்யாணி பாட்டி எம்.டி, டி.சி.ஹெச் - துளசி, தூதுவளை இத்யாதிகளைப் போட்டு ஒரு கஷாயம் பிரிஷ்கிர்ப்ஷன் கொடுப்பார். அதையும் குடித்து வாயிலெடுத்தால் மாமாவின் ஆப்த நண்பர் சீனாதானா மாமா வந்து "என்ன ஓய் என்ன மாத்திரைக் கொடுத்திருக்கிறார் டாக்டர்? காட்டும் பார்க்கட்டும்"ன்னு மிரட்டுவார். சீனாதானா மாமாவிடம் மூனாவது வரை படித்த ஒரு பையன் அப்புறம் தேறி டாக்டராகிவிட்டதால் அவருக்கு மெடிகல் காலேஜ் டீன் என்று நினைப்பு. "இந்த மருந்தெல்லாம் சின்னப் பிள்ளைகளுக்கு குடுக்கவே கூடாது தெரியுமா...? எருமைமாட்டுக்கு குடுத்தா கூட ரெண்டே நாள்ல சுருண்டு படுத்துரும்...நான் சொல்றதக் கேளும்..." என்று அவர் ஒரு பிரிஸ்கிர்ப்ஷன் குடுப்பார். இதெல்லாம் கேட்கவில்லையானால் மாமா "லங்கணம் பரம ஔஷதம்"ன்னு கடுங்காப்பிக்கும் ஆப்பு வைப்பார். இதற்க்குள் காய்ச்சலே ஐய்யோ பாவம்ன்னு ஓடி போயிடும். அப்புறம் வெறும் இட்லியிலிருந்து ஆரம்பித்து..தயிர் சேர்ப்பதற்குள் இரண்டு வாரம் ஓடிவிடும்.

ஹூம் இப்போல்லாம் காய்ச்சல் வந்தா சப்பாட்டில் கைவைப்பதே இல்லை. என் மகள்கள் என்னடாவென்றால் காய்ச்சல் போது தான் தினுசு தினுசாக கொறிப்பதற்கு கேட்கிறார்கள்..சரி எதாவது வயத்துக்குள் போச்சுன்னா சரின்னு கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.

Monday, October 29, 2007

சினிமா அவியல்

உங்களுக்கு காய்ச்சல் வந்திருக்கிறதா? கட்டாயம் வந்திருக்கும்! ஒரு வேளை இல்லையென்றால் ஒரு பெரிய வெங்கயாத்தைக் குறுக்கால வெட்டி இரண்டு கஷ்கத்திலும் வைத்து ஒரு இரவு படுத்தால் காலையில் காய்ச்சல் வரும். ஸ்கூல் அரையாண்டு பரீட்ச்சைக்குப் படிக்கவில்லையே என்ற கவலைக்கு ஒரு நண்பன் சொன்ன உபதேசம் தான் இது. நான் இதுவரை முயற்சி செய்ததில்லை. நீங்க வேணா பார்த்துட்டு சொல்லுங்க :)

இந்த ஒருவார காய்ச்சலுக்கெல்லாம் அஜீஸ் டாக்டர் தரும் பென்சிலின் ஊசி மற்றும் கசப்பான மருந்த்துக்கு மேல் மாமா சொல்லும் பிரிஸ்கிரிப்ஷன் "ல்ங்கணம் பரம ஔஷதம்" - அதாவது பச்சத் தண்ணி கூட வாயில படக்கூடாது. வயிறு ஒட்ட ஒட்ட கிடந்தால் நாலாவது நாள் சண்முக பவான் பரோட்டா சால்னாவிலிருந்து, பொதுவாக பார்த்தாலே குமட்டிக் கொண்டு வரும் கோதுமை ரவை உப்புமா வரை எல்லாவற்றையும் ஒரே சமயத்தில் தின்று தீர்க்கவேண்டும் என்ற பசியும் வெறியும் வரும். அந்த மாதிரி இந்தியாவிலிருந்து வந்த பிறகு எந்த ராஜா எந்த நாட்டை ஆண்டாலும் வாரத்துக்கு மினிமம் ஒரு சினிமா பார்க்காவிட்டால் எனக்கு காய்ச்சல் வருகிறது. இவற்றில் இரண்டு மாதங்களுக்குப் பிறகு ப்ளாக் அடிக்க யோசிக்கும்போது நல்ல காரணங்களுக்காக நினைவில் நிற்பது மிகச் சில.

ஒரிஜினல் வந்த பிறகு தான் பார்பேன் என்று பிடிவாதமாக இருந்த சிவாஜி பார்த்த போது இதற்காகவா இவ்வளவு நாள் காத்திருந்தோம் என்று ஆகிவிட்டது. பாட்டும், ரஜினியின் மேக்கப் மற்றும் கெட்டபுகள் தவிர நீங்கள் ரஜினி ரசிகராயிருந்தால் தவிர பார்ப்பதற்கு ஒன்றும் இல்லையோ என்று தோன்றியது. ரஜினியிடம் அந்த பழய துள்ளலைப் பார்க்கும் போது சந்தோஷமாக இருந்தது. மற்றபடி படத்தில் இருத்ந பிரம்மாண்டமும் செய்திருக்கும் செலவையும் பார்க்கும் போது கூடக் கொஞ்சம் செல்வழித்து ரூம் போட்டு யோசித்து ஸ்கிரிப்டிலும் கதையிலும் கொஞ்சம் நேரம் செலவழித்திருக்கலாம் என்று தான் தோன்றியது. ஷ்ரேயா ஆக்சிடன்ட் ஆன அம்பாஸிடர் கணக்கா நெளித்து நெளித்து ஆடுகிறார்(நடக்கிறார்), வந்து போகிறார். சொல்வதற்கு ஒன்றுமில்லை.

ரொம்ப நாளாக பார்க்கவேண்டும் என்று நினைத்து சமீபத்தில் தான் பார்க்கமுடிந்த ஒரு நல்ல படம் "குப்பி". தொப்புளைக் காட்டும் ஒரு அயிட்டம் சாங், மசாலாவுடன் ஒரு கதை முடிச்சு, திருப்பம், அம்மா செண்டிமென்ட் என்று கதையமைப்பதற்கு கொஞ்சம் மெனெக்கெட்டால் போதும். ஆனால் முடிவு முதற்கொண்டு எல்லாமே எல்லோருக்கும் தெரிந்த ஒரு உண்மைச் சம்பவத்தை விறுவிறுப்பாக படமாக்குவது என்பது என்னைப் பொறுத்தவரையில் சவாலான விஷயம். சவாலை மிகத் திறமையாகக் கையாண்டு விறு விறுப்பாக எடுத்திருக்கிறார்கள். படத்தில் சிவராஜனாக வரும் இயக்குனர் (அப்பிடித்தானே?) பாத்திரமாகவே மாறி நடித்திருக்கிறார். ஈ.ழ பிண்ணனி அதிகம் தெரியாத எனக்கு "நாங்கள் தவறு செய்திட்டோம் அதனால் தண்டனையை அனுபவிக்கிறோம்" என்று சொல்வது மட்டும் கொஞ்சம் சினிமாத்தனமாக இருந்தது. மும்பை குண்டுவெடிப்பை பிண்ணனியாக கொண்ட "ப்ளாக் ப்ரைடே" படத்தை விட இந்தப் படம் பல மடங்கு சிறப்பாக இருப்பதாக எனக்குப் பட்டது. அண்ணி மாளவிகா நடிப்பில் எனக்கும் ரொம்பவே நம்பிக்கையுண்டு. கலக்கியிருக்கிறார். ஒரு அழுத்தமான படம் எப்படி எடுக்கலாம் என்று இந்த திரைக் கதையிலிருந்து நிறைய கற்றுக்கொண்டேன்.

ஓ.கே ரகத்தில் நினைவில் நிற்பது இன்னொரு திகில் பேய்ப் படம் "சிவி". சமீபத்தில் திகில் படங்களே வராத நிலையில் இந்த படம் ஓ.கே சொல்லலாம். ஆனால் வர வர பேய்க் கதைகளெல்லாம் இப்போது போர் அடிக்க ஆரம்பித்துவிட்டது. எல்லா பேய்ப் படங்களிலும் பெண் பேய்களையே காட்டுகிறார்கள். அதுவும் நம்மூரில் வரும் பேய்ப் படங்களிலெல்லாம் இந்தப் பேய்களை பெண்ணாயிருக்கும் போது யாராவது ரேப் செய்திருப்பார்கள் அது அப்புறம் பேயாகி அஷ்வினி ஹேராயில் விளம்பரம் மாதிரி தலையை விரித்துப் போட்டுக்கொண்டு பயமுறுத்தும். பயமுறுத்த வசதியாக தலையை விரித்துப் போட்டுக்கொண்டாலும் கதையிலாவது கொஞ்சம் வித்தியாசம் காட்டவேண்டாமா? பாதிரியார், மாதாக் கோயில் மணியோசை, ரேப் செய்வதற்கு முன்னால் ஒரு நெஞ்சை நக்குகிற பாட்டு, குழாயில் தண்ணீர் ரத்தமாகுகிற கண்றாவி, இன்னும் பேய்களெல்லாம் எத்தனை நாட்களுக்குத்தான் ஒயிட் கலர் ராசாத்தி நைட்டி மற்றும் கவுனை மட்டுமே போட்டுக்கொண்டு உலாத்துமோ தெரியவில்லை(இதில் வெளிநாட்டு பேய்களும் விதிவிலக்கில்லை)...இதுல மூனு நாலு டப்பா நைசில் பவுடரைவேறு முகத்தில் அப்பிக்கொண்டு ரா..ரா ஜோதிகா மாதிரி கண் மை வேறு. ஏம்பா புதுசா ஐடியாவே கிடக்கலையா..இல்லை படமெடுக்கிற உங்களுக்கெல்லாம் கல்யாணமாகவில்லையா? - பார்முலாவா மாத்துங்கப்பா. புதுமுகங்கள் நடிப்பில் மெனெக்கெட்டு இருக்கிறார்கள். ஓ.கே ரக கதைக்கு திரைக்கதை மிக உதவியிருக்கிறது, திரைக்கதைக்கு சபாஷ் சொல்லலாம்.

சத்தம் போடாதே - இயக்குனர் வசந்த் என்பதால் எதிர்பார்ப்பு நிறைய இருந்தது. படம் மீண்டும் ஓ.கே ரகம். திரைக்கதையை போரடிக்காமல் கொண்டு சென்றிருக்கிறார். ஆனால் கதை சம்பிரதாய க்ளைமாக்ஸ் எதுவுமில்லாமல் டக்கென்று முடிந்துவிடுகிறது. உண்மைக்கதை அப்பிடி இருப்பதால் அவ்வாறு அமைத்திருக்கலாம். அனால் மசாலா இல்லாத ஒரு விறுவிறுப்பான க்ளைமாக்ஸ் இருந்திருந்தால் சபாஷ் போட வைத்திருக்கும் என்று எனக்குத் தோன்றியது. காதல் கோட்டையில் அவ்வளவு பில்டப் ஏற்றி...கடைசியில் தேவயாணி ட்ரெயினிலிருந்து டோய்ங் என்று குதிக்கும் போது இவ்வளவு சிம்பிளாக முடித்துவிட்ட்டார்களே என்று எனக்கு ஒரு ஏமாற்றம் வந்தது...அதே தான் இங்கும் தோன்றியது. பிருத்விராஜ் நடிப்பு நாளுக்கு நாள் மெருகேறி வருகிறது. பஞ்ச் டயலாக், அலட்டலான நடிப்பு எதுவிமில்லாமல் ஒரு பெரிய ரவுண்டு வருவார் என்று எனக்குள் பட்சி சொல்கிறது. இப்போதைக்கு எங்கள் வீட்டில் எல்லாருக்கும் ஃபேவரிட் ஆக்டர் இவர் தான்.

அடுத்து தலைவர் படத்தை தவிர ரொம்ப எதிர்பார்ப்போடு காத்திருக்கும் படம் "ஓரம்போ". ட்ரைலர் முன்னோட்டத்திலே எதிர்பார்ப்புகளை கூட்டியிருக்கும் படங்களில் இதுவும் ஒன்று. மும்பை (நானாபடேகர்) படங்களின் சாயலில் பட்டையக் கிளப்பியிருக்கிறார்கள். எப்படி வந்திருக்கிறதோ என்று ஆர்வம் மேலோங்குகிறது. ஐய்யா சாமி சொதப்பிடாதீங்கப்பூ.

Wednesday, October 24, 2007

ஹாலிடே-3

முதல் நாள் பீச் பீச்சாக சுற்றினோம் என்று சொன்னேன் அல்லவா, சாப்பாடு பற்றி சொல்லவே இல்லையே. முதல் நாள் கிளம்புவதற்கு முன்னாலே தங்கமணி வீட்டில் பாவ் பாஜி செய்து டப்பாவில் எடுத்துக் கொண்டுவிட்டதால் வழியிலேயே சர்வீஸ் ஸ்டேஷன்களில் நிப்பாட்டி சாப்பிட்டோம் . "என்ன தான் சொல்லு உன் கையால சமைச்ச சாப்பாட்டுக்குப் பக்கத்துல இந்த பர்கர் கிங்லாம் பிச்சை தான் எடுக்கனும்"ன்னு ஏத்திவிட்டு கூட கொஞ்சம் பாவ்பாஜியை நொக்கிவிட்டதில் காரில் ஏறி உட்கார்ந்ததும் சொக்கிவிட்டது.

"நாளைக்கு டிபனுக்கு பேசாம சன்னா மசாலாவும் சப்பாத்தியும் செஞ்சிக்கலாம் கையிலயும் எடுத்துட்டு போனா இதே மாதிரி அங்கங்க நொக்கறதுக்கு வசதியா இருக்கும்"ன்னு சொல்லுவதற்க்குள் தங்கமணி உண்ட மயக்கத்தில் தொண்டி ஆகியிருந்தார். அன்று நாங்கள் தங்கியிருந்த இடத்திலேயே அழகான விளையாடும் இடம் இருந்ததால் அதில் எல்லாரும் விளையாடிக் களைத்து அடுத்த நாள் வழக்கம் போல எட்டு மணிக்கு எழுந்து அரக்கப் பரக்கக் கிளம்பினோம்.

அடுத்த நாள் சப்பாத்தி, சன்னா மசாலா நினைப்பில் வேல்ஸ் மண் விழுந்தது. எதற்க்கும் இருக்கட்டும் என்று எடுத்து வந்திருந்த கார்ன் ப்ளேக்ஸ் பாலுடன் பெப்பரபேன்னு முழித்துக் கொண்டிருந்தது. "இன்னாது கார்ன் ப்ளேக்ஸா...இதுக்குத் தான் கடுகு, மஞ்சப் பொடி, சன்னான்னு டின்னு கட்டினியா...அப்போ அதெல்லாம் வேஸ்டா..." என்று மனு போட..."வேண்டாம் வேஸ்டாப் போக வேண்டாம் அந்த கார்ன் ப்ளேக்ஸ குடுங்க...அதிலயே தாளிச்சிக் கொட்டி சன்னாமசாலவையும் போட்டுத் தரேன் சாப்பிடுங்க"ன்னு அந்தக்கால வில்லன் மாதிரி தங்கமணி மிரட்ட ஆரம்பித்துவிட்டார். " ஐயய்யோ அதுக்கு எங்க மாமியார் செய்யற ரசத்தையே குடிச்சிரலாம்.. சரி சரி சமாதானம்..இதுக்குத் தான் நான் முதல்லயே கடுகு மஞ்சப் பொடியெல்லாம் எடுத்துட்டு வர வேண்டாம் வெறும் கார்ன் ப்ளேக்ஸ், மெக்டோனால்ட்ஸ்ன்னு மேனேஜ் பண்ணிக்கலாம்ன்னு சொன்னேன்"- என் டயலாகின் முதல் பகுதி தங்கமணி காதில் விழாததால் வேறு எந்த பிரச்சனையுமில்லாமல் ஊர் சுத்த கிளம்பிவிட்டோம்.

இரண்டாம் நாள் குழந்தைகளுக்காக டயனோசர் பார்க், கேம்ஸ் பார்க் என்று சுத்தி விட்டு மூன்றாம் நாள் மீண்டும் காடு மலைன்னு கண்ணன் தேவன் டீ வாங்கப் போன மாதிரி சுத்தினோம். அன்றைக்கு கற்காலத்துக்கு பிறகு வந்த இரும்புக் காலத்தில் மக்கள் வாழ்ந்த மாதிரி செட் செய்திருந்த ஒரு இடத்துக்குப் போனோம். இன்றைய நவீன யதிரங்களோ ஆயுதங்களோ எதுவும் உபயோகப்படுத்தாமல் அந்தக் காலத்தில் எப்படி வாழ்ந்திருப்பார்களோ, அவர்களுக்கு என்ன ஆயுதங்கள் இருந்திருக்குமோ அதைக் கொண்டு அந்த இடத்தையும் வீடுகளையும் மீண்டும் உயிர்பித்திருந்தார்கள். வந்திருந்த வெள்ளைக்கார மாமாக்களும் மாமிக்களும் வாயைப் பொளந்து கொண்டு கதை கேட்டுக் கொண்டிருந்தார்கள். எனக்கு நம்மூர் கிராமங்களை திரும்ப பார்த்த மாதிரி இருந்தது. இன்னும் நம்மூர் கிராமங்கள் அந்தக் காலத்து வசதிகளுடனே இருப்பதை எண்ணும் போது கொஞ்சம் வருத்தமாகவும் இருந்தது.

பிறகு அடுத்த நாள் ஸகந்தவேல் கோவிலுக்குப் போனோம். எனக்கு சாமியைப் பார்க்கும் ஆர்வத்தை விட அங்கேயே முழுக்க முழுக்க இருக்கும் மந்திரம் சொல்லும் வெள்ளைக்காரர்களைப் பார்ப்பதற்கே ஆர்வமாக இருந்தது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஆள் நடமாட்டமே தெரியாத ஒரு காட்டு வழியாகப் பயணம். ஒரு ஒத்தயடிப் பாதையில் தான் காரே போகவேண்டும். வழியிலேயே போலீஸ் காரை நிப்பாட்டிவிட்டது. "ஐயையோ நான் கல்யாணம் பண்ணி குடும்பம் நடத்துவதைத் தவிர எந்தத் தப்பும் செய்யலையே" என்ற எனது உதறலைக் கண்டுகொள்ளாமல் ஃபூட் அன்ட் மவுத் நோயினால் அந்தக் கோவிலில் மேலும் இரண்டு மாடுகள் பாதிக்கப்பட்டிருக்கின்றன என்று அவற்றைக் கொன்(ண்)று போக வந்திருந்தார்கள். இதற்க்கு முன் சம்பூ என்று மாடு நோயுற்று அது பெரிய பிரச்சனையாகிவிட்டதால் இந்த முறை அவற்றை நீக்கும் வரை யாரையும் கோவில் பக்கமே அனுமதிக்கவில்லை. நீண்ட நேரத்துக்குப் பிறகு அனுமதித்தார்கள்.

எங்களை மாதிரியே கார்டிஃப்லிருந்து கோயிலுக்கு ஏழு பேர் கொண்ட தமிழ் கூட்டம் வந்திருந்தது. அதில் எல்லோரும் நர்ஸாக பணியாற்றிக் கொண்டிருந்தார்கள். பார்த்தவுடனேயே நட்பாகி ஜாலியாகப் பேசிப் பழக ஆரம்பித்துவிட்டதால் காத்திருப்பு போரடிக்காமல் இருந்தது.

நோய்க்குப் பலியான மாடுகளுக்காக அன்று பூஜை நடைபெறவில்லையாதலால் வெள்ளைக்காரன் "ஓம் சுவாகா" மந்திரம் சொல்லுவதைக் காணக் கிடைக்கவில்லை. ஆனால் கோயிலில் வேறு ஒரு அங்கியணிந்த பூசாரி அம்பாளின் மகிமையைப் பற்றியும், ஜனனம் மரணம் பற்றிய தத்துவங்களையும் எங்களிடம் தெளிவாகப் பேசிக்கொண்டிருந்தார். பொதுவாகவே இந்த மாதிரி சமாச்சாரங்களுக்கும் எனக்கும் கொஞ்சம் தூரம் அதிகம். இருந்தாலும் ப்ளாக்க்கு எதாவது மேட்டர் தேறுமான்னு கவனமாகக் கேட்டும் ஒன்றும் புரியவில்லை.


கோவிலில் கார்டிப் நர்ஸ் நண்பர்களுடன் எல்லா இடங்களுக்கும் போனோம். பேச்சுவாக்கில் "நீங்க இண்டர்நெட்டில் ப்ளாக்லாம் படிப்பீர்களா...நான் கூட "டுபுக்கு"ங்கிற பெயரில் ஒரு ப்ளாக் வைத்திருக்கிறேன்" என்று ஒரு நண்பரிடம் பிட்டைப் போட ஆரம்பிப்பதற்குள் நண்பர் இடைவெட்டினார்.. "எங்கங்க....அதெல்லாம் ஒரு காலம்...கல்யாணம் ஆகறதுக்கு முன்னாடி நான் கூட "நைஸ் கை"ங்கிற பெயரில் ராத்திரி பகல்ன்னு பாராம ஃபிகருங்க கிட்ட சேட்டில் நிறைய கடலை போட்டிருக்கேன்..இப்போ அதுக்கெல்லாம் ரொம்ப நேரமில்லைங்க" என்று நண்பர் பதில் சொல்லி "கல்யாணமாகியும் இன்னமுமா இதையெல்லாம் கண்டினியூ பண்றன்றீங்கன்னு ஒரு லுக்கு விட்டார் பாருங்கள். தஙகமணிக்கு என்ன்னோட தன்னடக்கம் ப்ளாப்பானது சிரிப்பான சிரிப்பு. அப்புறம் நண்பரிடம் "ஐய்யைய்யோ இது அந்த மாதிரி மேட்டரில்லைங்க வேறங்க..இது ப்ளாக்குன்னு..." ஒரு மாதிரி அசடு வழிந்துகொண்டே சமாளித்தேன். ஆனாலும் அவர்களெல்லாம் மிக இனிமையான நண்பர்களாகி இப்பவும் அப்பப்போ ஃபோன் செய்துகொண்டிருக்கிறார்கள்.

இவ்வாறாக வேல்ஸ் ட்ரிப் இனிதே நிறைவடைந்தது.

முதல் நாள் கார்ன் ப்ளேக்ஸுக்குப் பிறகு தங்கமணி அதற்கடுத்த நாட்களில் சப்பாத்தி, சன்னாமசாலா, மற்றும் புளியோதரை செய்தார் என்பதை இந்த இடத்தில் குறிப்பிட்டு விடுகிறேன் (ஆங்..அப்புறம் வாங்கிக் கட்டுறது யரு?)




Tuesday, October 23, 2007

நான் இனிமேல்....

நான் இனிமேல் ஒழுங்காக ப்ளாக் போஸ்ட் போடுவேன். சொன்ன பேச்சு கேட்பேன். லேட்டாக வரமாட்டேன். கமெண்டுக்கெல்லாம் ஒழுங்காக பதில் போடுவேன். சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப் போக மாட்டேன். வாரத்துக்கு மூன்று பதிவாவது போட முயற்சிப்பேன்.

நான் இனிமேல் ஒழுங்காக ப்ளாக் போஸ்ட் போடுவேன். சொன்ன பேச்சு கேட்பேன். லேட்டாக வரமாட்டேன். கமெண்டுக்கெல்லாம் ஒழுங்காக பதில் போடுவேன். சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப் போக மாட்டேன். வாரத்துக்கு மூன்று பதிவாவது போட முயற்சிப்பேன்.

நான் இனிமேல் ஒழுங்காக ப்ளாக் போஸ்ட் போடுவேன். சொன்ன பேச்சு கேட்பேன். லேட்டாக வரமாட்டேன். கமெண்டுக்கெல்லாம் ஒழுங்காக பதில் போடுவேன். சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப் போக மாட்டேன். வாரத்துக்கு மூன்று பதிவாவது போட முயற்சிப்பேன்.

நான் இனிமேல் ஒழுங்காக ப்ளாக் போஸ்ட் போடுவேன். சொன்ன பேச்சு கேட்பேன். லேட்டாக வரமாட்டேன். கமெண்டுக்கெல்லாம் ஒழுங்காக பதில் போடுவேன். சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப் போக மாட்டேன். வாரத்துக்கு மூன்று பதிவாவது போட முயற்சிப்பேன்.

நான் இனிமேல் ஒழுங்காக ப்ளாக் போஸ்ட் போடுவேன். சொன்ன பேச்சு கேட்பேன். லேட்டாக வரமாட்டேன். கமெண்டுக்கெல்லாம் ஒழுங்காக பதில் போடுவேன். சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப் போக மாட்டேன். வாரத்துக்கு மூன்று பதிவாவது போட முயற்சிப்பேன்.

நான் இனிமேல் ஒழுங்காக ப்ளாக் போஸ்ட் போடுவேன். சொன்ன பேச்சு கேட்பேன். லேட்டாக வரமாட்டேன். கமெண்டுக்கெல்லாம் ஒழுங்காக பதில் போடுவேன். சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப் போக மாட்டேன். வாரத்துக்கு மூன்று பதிவாவது போட முயற்சிப்பேன்.

நான் இனிமேல் ஒழுங்காக ப்ளாக் போஸ்ட் போடுவேன். சொன்ன பேச்சு கேட்பேன். லேட்டாக வரமாட்டேன். கமெண்டுக்கெல்லாம் ஒழுங்காக பதில் போடுவேன். சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப் போக மாட்டேன். வாரத்துக்கு மூன்று பதிவாவது போட முயற்சிப்பேன்.

நான் இனிமேல் ஒழுங்காக ப்ளாக் போஸ்ட் போடுவேன். சொன்ன பேச்சு கேட்பேன். லேட்டாக வரமாட்டேன். கமெண்டுக்கெல்லாம் ஒழுங்காக பதில் போடுவேன். சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப் போக மாட்டேன். வாரத்துக்கு மூன்று பதிவாவது போட முயற்சிப்பேன்.

நான் இனிமேல் ஒழுங்காக ப்ளாக் போஸ்ட் போடுவேன். சொன்ன பேச்சு கேட்பேன். லேட்டாக வரமாட்டேன். கமெண்டுக்கெல்லாம் ஒழுங்காக பதில் போடுவேன். சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப் போக மாட்டேன். வாரத்துக்கு மூன்று பதிவாவது போட முயற்சிப்பேன்.

நான் இனிமேல் ஒழுங்காக ப்ளாக் போஸ்ட் போடுவேன். சொன்ன பேச்சு கேட்பேன். லேட்டாக வரமாட்டேன். கமெண்டுக்கெல்லாம் ஒழுங்காக பதில் போடுவேன். சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப் போக மாட்டேன். வாரத்துக்கு மூன்று பதிவாவது போட முயற்சிப்பேன்.

Monday, September 24, 2007

ஹாலிடே-2

தங்கமணியின் கடுகு எடுத்து வைச்சாச்சா என்ற சந்தேகம் வலுத்துக் கொண்டே போனது. "இதோ பாரு பெட்ரோல் விக்கிற விலைக்கு கடுகு மேட்டருக்கெல்லாம் காரைத் திருப்பமுடியாது" என்று டயலாக் விட வாயைத் திறக்கும் போது சேட் நேவ்வின் ரிமோட் மற்றும் மொபைல் போன்கள் இருக்கும் பையை வீட்டிலேயே வைத்து விட்டது நியாபகம் வந்தது.

"எலே மண்டைன்னா பொடுகில்லாம இருக்க முடியாது, சமையல்ன்னா கடுகில்லாம இருக்கமுடியாது நம்ம பாட்டன் முப்பாட்டன் காலத்துலேர்ந்து சுத்துப்பட்டு பதினெட்டு கிராமத்துலயும் யாராவது கடுகில்லாம சமைச்சிருக்காங்களான்னா பொறந்து குழந்தை கூட 'இல்லை'ன்னு பத்து லாங்குவேஜ்ல சொல்லும்டா.. என்னடா பர்த்துட்டிடுருக்க...சண்முகம் வண்டிய வூட்டுப் பக்கம் திருப்புலான்னு" விஜயக்குமார் மாதிரி டயலாக்வுட்டு சமாளிச்சு வீட்டுக்குப் போய் பார்த்தா கடுகைத் தவிர இன்னும் இரண்டு மூன்று முக்கியமான பைகளையும் வைத்துவிட்டு வந்திருந்தது தெரிந்தது.

எல்லாத்தையும் அள்ளிப் போட்டுக்கொண்டு திரும்ப பயணத்தை ஆரம்பித்தோம். இரண்டு மணி நேரம் கழித்து வழியிலிருந்த சர்வீஸ் ஸ்டேஷனில் நிப்பாட்டும் போது "தயிரை பிரிஜிட்லிருந்து எடுத்து வெளியே வைச்சிருக்கேன் கிளம்பறதுக்கு முன்னாடி நியாபகப் படுத்துங்க"ன்னு தங்கமணி நியாபகப் படுத்தச் சொன்னது நியாபகத்துக்கு வர "மண்டைன்னா மயிரில்லாம இருக்காது சாப்பாடுன்னா தயிரில்லாம இருக்காது"ன்னு மீண்டும் விஜய்குமார் டயலாக் விட்டால் வேல்ஸை வீட்டிலிருந்து பைனாகுலர் வழியாத்தான் பார்க்கவேண்டும் என்பதால் ராஜ்கிரண் மாதிரி ஃபீலிங்கா "ஏன்யா நாமென்ன பொறக்கும் போதேவா தயிரோட பொறந்தோம்..ஒவ்வொரு ஊரு தயிருக்கும் ஒரு மணம் இருக்கும் ஒரு குணம் இருக்கும் ஒரு ருசியிருக்கும், அந்தந்த மண்ணோட வாசத்த போய் பழகித் தான் தெரிஞ்சிக்கிருவோமே"ன்னு தயிரிருந்த திசைக்கு கும்பிடு போட்டுவிட்டு பயணத்தை தொடந்தோம்.

"வெள்ளைக்காரனும் தான் ஹாலிடே போறான். முந்தின நாள் மத்தியானம் போட்ட பணியனைக் கூட மாத்தாம ஒரு செருப்பைப் போட்டுக்கொண்டு காரை எடுக்கிறான்...போற வழியில ஒரு ஃபிகர பிக்கப் பண்றான், போனமா ஜாலியா இருந்தமான்னு சூப்பரா ரிலாக்ஸாகி வந்திடறான்...நாமும் போறோமே...போற இடத்துல நூறு பேருக்கு சமைச்சு அன்னதானம் கொடுக்கப் போற மாதிரி கடுகு, மஞ்சப் பொடி, தயிரு...சே..." என் புலம்பலை தங்கமணி கண்டுக்கவே இல்லை. "இந்தப் புலம்பலை எல்லாம் உங்க ப்ளாகோட வைச்சுக்கோங்க..."ன்னு புத்திமதி சொல்லிவிட்டு தெம்பாக தூங்கிவிட்டார்.

சேட்நாவ் புண்யத்தில் பயணம் எந்த குழப்பமோ, சண்டையோ இல்லாமல் சப்பென்றிருந்ததால் குழந்தைகளும் போரடித்து நன்றாகத் தூங்கிவிட்டார்கள். ஐந்தரை மணி நேரத்துக்கப்புறம் வேல்ஸ் எல்லையை தாண்டி உள்ளே போகும் போது வேல்ஸின் அழகு மனதைக் கொள்ளை கொண்டது. மலையில் அடர்ந்த காட்டுக்கு நடுவே காட்டாறைப் பார்த்துக் கொண்டே காரை ஓட்டுவது மிக ரம்யமாக இருந்தது. என்னைத் தவிர எல்லாரும் தூங்கி எழுந்து தெளிவாக இருந்தார்கள்.

தங்கப் போகும் இடத்தை பார்த்ததும் மனம் குதூகலித்தது. அடர்ந்த மரங்களுக்கு நடுவே மிக அழகான மரவீடு. இறங்கி கொண்டு வந்த சாமான்களை எடுத்து வைக்கவே ஒரு மணி நேரம் பிடித்தது. அடுத்த நாள் பீச் பீச்சாக சுத்தினோம். இதற்கு முன் ஏப்பிரலில் நண்பர்களோடு ஐல் ஆஃப் வொய்ட் போயிருந்தோம். வாழ்நாளில் மறக்க முடியாத இனிமையான பயணம் அது. மிக மிக குதூகலமாக காலேஜ் வாழ்கை மாதிரி ஜாலியாக இருந்த பயணம். எனக்கு ஒரு நீண்ட நாளைய ஆசை ஒன்று உண்டு. "தீப் பிடிக்க தீப் பிடிக்க" பாட்டில் ஆர்யா போட்டுக் கொண்டு வருவது மாதிரியான முண்டா பனியனைப் போட்டுக்கொண்டு பீச் ஓரத்தில் மணலில் ஜாக்கி ஷெராஃப் மாதிரி ஓடி வரவேண்டும் அதை படமாக்கிக் கொள்ளவேண்டும் என்று. தங்கமணியிடம் எப்படி கேமிரா ஆங்கிள் முதற்கொண்டு எல்லாத்தையும் விளக்கு விளக்கு என்று முன்பே விளக்கியிருந்தேன். கிடைத்த சந்தர்பத்தை கோட்டை விடாமல் காறித் துப்பிவிட்டு ஒருவழியாக சம்மதித்திருந்தார். பீச்சுக்கு போன பிறகு லொக்கேஷன் ஃபைனலைஸ் பண்ணிவிட்டு அம்மணியைத் தேடினால் காணோம். தனது தோழியோடு ஜாலியா செல் போனை வேறு ஆஃப் செய்துவிட்டு அரட்டை அடித்துக் கொண்டிருந்தார். பீச்சில் ஒரு நீளமான குட்டைச் சுவர் இருந்தது. நான் அதற்க்குப் பின்னால் ஒளிந்து கொள்கிறேன் நீ லாங் ஷாட்டில் ரெடி சொன்னவுடன் குட்டைச் சுவற்றில் ஏறி குதித்து ஹீரோ மாதிரி ஓடி வருகிறேன் என்று சொல்லியிருந்தேன். நன்றாகத் தலையை ஆட்டிவிட்டு அரட்டைக் கச்சேரியில் மூழ்கி விட்டார்.

இது தெரியாமல் நான் குட்டைச் சுவருக்குப் பின்னால் ஒளிந்து கொண்டு இப்போ ரெடி சொல்வார் அப்போ ரெடி சொல்வார் என்று பார்த்தால்...வழியக் காணும். இதற்குள் நண்பர்கள் என்ற பெயரில் கூட வந்த வானரக் கூட்டம் எடுத்த படம் தான் கீழே.(க்ளிக்கியவரும் பிரபல ப்ளாகர் தான்)

ரங்கீலா ஜாக்கி ஷெராஃப் மாதிரி ஓடி வரணும்ன்னு இருதவன இப்படி அவசரத்துக்கு ஓரமா ஒதுங்கினவன ஆக்கிட்டீங்களடான்னு அன்னிக்குப் பூராவும் எனக்கு வயத்தெரிச்சல் தாங்கவில்லை.

Sunday, September 09, 2007

ஹாலிடே

நானெல்லாம் ஸ்கூல் படிக்கும் போது லீவுவிட்டா ஊரிலிருக்கும் காத்தாடுகிற கிருஷ்ணா தியேட்டரில் எங்க தாத்தா பார்த்து ஜொள்ளுவிட்ட அஞ்சலி தேவி படம் போடுவான் (மூதேவி ஹாஃப் இயர்லி எக்ஸாம் போதுதான் புத்தம் புதிய ரிலீஸ்லாம் போடுவான்). அதுக்கு கெஞ்சிக் கூத்தாடி பிரெண்ட்ஸோடு போறோம்ன்னு சொல்லி ரெண்டு பேர் போவோம். அதுக்கு கூட புது ட்ராயர்லாம் போட்டுக்கொள்ள முடியாது. நாங்கள் வழக்கமாக போகிற சிமிண்ட் பென்ச் டிக்கெட்டில் தேய்த்து தேய்த்து ட்ராயர் கிழிந்துவிடும் என்று மாமி ஆட்சேபிப்பார் என்பதால் குலேபகாவல்லி டிராயர் மட்டும் தான் அனுமதி. அது டிராயரா பாவாடையா என்று பார்ப்பவர் சந்தேகம் தீருமுன் கூட்டமில்லாத பெண்கள் வரிசையையில் புகுந்து டிக்கெட் வாங்கி, முதல் வரிசையில் முன்னாடி சாய்ந்து கொள்ள வச்சதியாக திண்டு இருக்கும் இடமாக பார்த்து இடம் பிடித்துவிடுவோம். இருபத்தைந்து பைசாவுக்கு ஒரு நீளமான மைசூர்பாகு கிடைக்கும் அதை வாங்கி, எழுத்து போடும் போது உறிஞ்ச ஆரம்பித்தோமானால் அஞ்சலி தேவி இரண்டாவது டேன்ஸ் பாட்டு ஆரம்பித்து முடிப்பதற்க்குள் காணாமல் போயிருக்கும். அதற்கப்புறம் ஜெயம் குண்டு சாம்பார் பருப்பு போட்டு மூனு வேளையும் கட்டு கட்டும் ஜெயமாலினி கையில் திராட்சைப் பழ கொத்தை வைத்துக் கொண்டு ஜிகுஜிகு வென்று பெல்லி டான்ஸ் ஆடும் போது முகத்தை மூடிக் கொண்டு விரலிடுக்கில் கேப் விட்டு பாட்டுமுடிந்துவிட்டதா என்று பார்த்து, அப்புறம் டொய்ங் என்று பி.ஜி.எம்ல்லி அஞ்சலி தேவி அழும் போது திண்டில் சாய்ந்தால் அப்பிடி ஒரு கிறக்கத்துடன் கண்ணைச் சுழற்றும், அழுகையெல்லாம் முடிந்து ஜெமினி கணேசனுக்கு வீரம் வரும் போது "இனிமே டேன்ஸ் கிடையாதுபா வெறும் சண்டை தான் " என்று பக்கதிலிருக்கும் பெரிசு அங்காலாய்த்து எழுப்பிவிடும். இந்த சமயத்தில் கருப்பு உள்பாவாடை ஸ்லிவ்லெஸ் சோளி தாடி மந்திரவாதி, மந்திரக்கோல், பாம்பு, உம்மாச்சி என்று கதை பட்டயக் கிளப்பும். அப்பிடியே மயிற்கூச்செரியும் முடிவை பார்த்து விட்டு பத்து நாளைக்கு அந்த படத்தை பற்றி பார்க்காதவர்களிடம் பேசி அதற்க்குள் படத்தை தியேட்டரிலிருந்து தூக்கிவிட்டால் இல்லாத ரெண்டு மூன்று காட்சியை வேறு சேர்த்துக்கொண்டு இப்படியே ஹாலிடே போய்விடும்.

இங்கே மகளுக்கு ஸ்கூல் விடுமுறை விட்ட அடுத்த நாளே "வேர் ஆர் வி கோயிங்" ஆரம்பித்துவிட்டது. கலெக்க்ஷனில் இருக்கும் "மணாளனே மங்கையின் பாக்கியம்" போட்டாலே காத தூரம் ஓடுகிறாள். தங்கமணிக்கு " நான் உழைத்து உழைத்து ஓடாய் போகிறேன்" என்று கவலை வேறு. அவர்களுக்குப் பிடித்த இடமாய் எங்காவது ஹாலிடே போய் அவர்களுக்கு வேண்டியதெல்லாம் வாங்கிக் கொடுத்தால் என் மன உளைச்சலெல்லாம் சொஸ்தமாகும் என்று வேல்ஸ் போகலாம் என்று ஏகமனதாய் தீர்மாணமாகியது. ஊரிலிருந்து மாமியார் வேறு வந்திருக்கிறார்கள் என்பதால் நமக்கு கொஞ்சம் சப்போர்ட், தங்கமணி பக்கம் ஓவரால் மெஜாரிட்டி கிடையாது இருந்தாலும் நானும் வழிமொழிய ஓகே ஆனது. அடர்ந்த காட்டுக்கும் நடுவில் காட்டேஜும் புக் செய்து பிரயாண யத்தம் களை கட்ட ஆரம்பித்தது.

"நாலு நாளுக்கு தானே போறோம் இதுக்கு எதுக்கு ஆயிரெத்தெட்டு பேக்? "

"எல்லாம் ஒரு சேஃப்டிக்கு தான்"

"என்ன எல்லாத்துக்கும் சும்மா சேஃப்டிக்கு..சேஃப்டிக்குன்னு சால்ஜாப்பு"

"இதோ பாரு ஆனானாப்பட்ட சுப்பர்மேனே என்ன தான் பேண்ட்க்கு மேல ஜெட்டி போட்டாலும் அதையும் ஒரு சேஃப்டிக்கு பெல்ட் போட்டு இறுக்கிகட்டியிருப்பார்...சுப்பர்மேனுக்கே அப்பிடின்னா..நாமெல்லாம் எம்மாத்திரம்" நான் அடித்த ஜோக்குக்கு என் மாமியார் வெட்கப்பட ஆரம்பித்துவிட்டார்.

அப்புறம் ஆனானப்பட்ட சுப்பர்மேன் ஷூ போட்டுக்கொண்டு இருக்கிறார், வாட்ச் கட்டிக்கொண்டிருக்கிறார் என்று ஆளாளுக்கு அடுக்க, எடுத்துக்கொண்டு போக வேண்டிய சாமான்கள் அபாய நிலையை அடைந்தது. "இந்த லெவலில் போச்சுன்னா இதையெல்லாம் நிரப்பி வெறும் காரை மட்டும் ஹாலிடெக்கு அனுப்ப முடியும்" என்று நான் திட்டவட்டமாக சொல்லிவிட, தங்கமணி பயந்து போய் குட்டி எலுமிச்சம்பழத்தை எடுத்து வெளியில் வைத்துவிட, "அது...தலையப் பார்த்து அந்த பயமிருக்கட்டும்.." என்று அஜீத் மாதிரி சவுண்ட் விட எதுவாக இருந்தது. செல்ப் கேட்டரிங் காட்டேஜ் என்பதால் சமையல் சாமான்கள் வேறு எடுத்துப் போக முடிவு செய்திருந்தோம். நாலு நாள் மளிகை சாமான் பட்ஜெட் மாச பட்ஜெட்டை தாண்டியிருந்தது. மாமியார் சப்போர்ட் இருந்ததால் சில முக்கய மேட்டர்களில் சீனியர் மெம்பர் வீட்டோ உபயோகப்படுத்த முடிந்தது. ஆனால் அதையும் "எட்டு வருஷமா மாப்பிளைக்கு அடிச்ச ஜால்ரா போதும் ரொம்ப ஓவரா ஜிங்கிச்சா போடாதே" என்று தங்கமணி அவர் வீட்டோவையும் ஓவர் ரூல் செய்துவிட்டார்.

காலை ஆறு மணிக்கு கிளம்புவதாக ப்ளான். எடுத்துப் போகவேண்டிய சாமான் செட்டுகளையெல்லாம் அடுக்கிவைத்து கிளம்புவதற்கு ஏழு மணியாகிவிட்டது. ஆபிஸுக்கு கிளம்பிக்கொண்டிருந்த அடுத்த வீட்டுக்காரர் "என்ன சார் சொல்லாம கொள்ளாம வீட்டைக் காலிபண்றீங்கன்னு வருத்தப்பட ஆரம்பித்துவிட்டார். தெரு திரும்பியதும் வரும் வழக்கமான "வீட்டைப் பூட்டியாச்சா சந்தேகத்துக்குப் பதிலாக தங்கமணிக்கு "கடுகு எடுத்து வைச்சேனா " சந்தேகம் வந்துவிட்டது.

- நீளமாகிடுச்சு அடுத்த பதிவில் முடிக்கிறேன்

Thursday, August 30, 2007

மொக்கை

ஆமாங்க வேலை பின்னி பெடெலெடுக்குதுங்க (ஆபிஸிலயும் :) ) பாரிஸ் ஹில்டன் யாரு பாரதியார் பேத்தியான்னு கேக்கற அளவுக்குப் போயிடுச்சுனா பார்த்துக்கோங்க. "இருடீ...நாலு அனானி கமெண்ட் போடறேன்..அப்பதான் சரியா வருவ"ன்னு அடிக்கடி மிரட்டும் தங்கமணியே "இன்னா ப்ளாக் அவ்வளவுதானா புட்டுக்கிச்சா"ன்னு நக்கல் விட ஆரம்பித்துவிட்டார். சரி சோகத்தை விட்டுவிடுவோம் அப்புறம் நாட்டுல என்ன விசேஷம்? போன பதிவில் ஷ்ரியாவை ஏன் அமைச்சரவையில் சேர்க்கவில்லை என்று நிறைய பேர் கேட்டிருந்தார்கள் அக்சிடென்ட் ஆன அம்பாசிடருக்கெல்லாம் அமைச்சரவையில் இடம் இல்லை என்று கேபினெட் உறுதியாக இருக்கிறது. இதில் அபிஅப்பா சின்னத் திரை தீபாவெங்கட்க்கு ஒரு சீட் வேணும்னு துண்டு போட்டு இடம் பிடிக்கப் பார்த்தார். அபி அப்பாஆஆஆஆஆஆஆஆ என்னத்த சொல்ல உங்களை....:)))


டி.வி நிகழ்ச்சிகளை ரொம்ப எதிர்பார்த்து பார்க்கிற பழக்கம் இப்போ ரொம்ப நாளா இல்லை. இரண்டு வருடங்களுக்கு முன்னாடி இங்க சன் டி.வி போட்ட புதுசுல அட நாலு வருஷம் கேப் விட்டுப் பார்த்தாலும் கதை புரியுதேன்னு காய்ஞ்ச மாடு மெட்டி ஒலி பார்த்த மாதிரி கோலங்கள் கிறுக்கு பிடிச்சி அலைந்திருக்கேன். கொஞ்ச நாள்லயே பித்தம் தெளிஞ்சு இந்த கருமத்துக்கு கே.டிவியில் எட்டு மணிக்குப் போடும் படங்களே பார்க்கலாம்ன்னு அதையும் கொஞ்ச நாள் பார்த்து காதல், தாலி, தாய்மாமா, நாய்க்குட்டி இவற்றில் எல்லாம் உபதேசம் பெற்று மூன்றாம் நிலைக்கு அப்புறம் உள்ள மோன நிலையை தொட்டுவிட்டு அப்புறம் அதுவும் வேலைக்காகாமல் நமக்கு எப்ப வேணா பார்த்தாலும் புரிய மாதிரி நடிக்கும் வெள்ளைக்கார பாப்பாக்கள் பக்கமும் திரும்பிவிட்டேன். இருந்தாலும் சனிக்கிழமைகளில் கொத்து பரோட்டா செய்யும் வேளைகளில் நைட்டி அணிந்த கணவர் கான்சப்ட் ஐடியா குடுத்த மகானைத் திட்டிக் கொண்டே திருவாளர் திருமதி (அப்போ தான் நான் எங்கூட்டுல கொத்து பரோட்டா செய்வேன்..) பார்க்க ஆரம்பித்தால் கலக்கப் போவது யாரு ஆரம்பிக்கும் போது நான் தான் என்று கரெக்டாக கொத்துபரோட்டா ஓடவைக்கும்.

சமீபத்தில் எதிர்பார்த்து பார்க்க வைத்திருக்கும் நிகழ்ச்சி "ஊ லலாலா". தமிழ்நாட்டில் இசைக்குழுக்களிடையே நடத்தும் போட்டி. ஏகப்பட்ட பில்டப்களில் இரண்டு எபிசோட்கள் இருந்தாலும் மூன்றாவதிலிருந்து கலக்க ஆரம்பித்திருக்கிறார்கள். கலந்து கொள்ளும் அணிகளின் திறமை வியக்க வைக்கிறது, வெட்கம் கொள்ளச் செய்கிறது. மக்கள் இசையில் சுத்திவிட்டு சுளுக்கெடுக்கிறார்கள். அதிலும் முதல் போட்டியில் கலந்து கொண்ட "அகம்" குழுவின் சொந்த கம்போசிஷன் இன்னும் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. முதல் தரம் கேட்கும் போதே ஜிவ்வென்று இருந்தது. அவர்கள் ஈ.மெயில் கிடைத்தால் ஒரு பெரிய சபாஷ் போடலாம் என்று நினைக்கவைத்தது. இந்த வாரம் வந்த "ஓம்" குழுவும் கலக்கிவிட்டார்கள். சென்னை டியூன்ஸின் (இல்லை மெட்ராஸ் டியூன்ஸா?) "சங்கரபாண்டி" பாடகர் சும்மா அனயாசமாக கலக்கினார். நாட்டுப்புற குழுக்கள் எதுவுமே கால் இறுதி சுற்றுக்கு தேறவில்லை என்பது வருத்தமாக இருந்தது. மதுரையில் பட்டயக் கிளப்புகிற குழுக்கள் இருக்கின்றன அவையெல்லம் கலந்துகொள்ளவில்லை போலும்.

சமீபத்தில் பார்த்த படங்களில் மிகப் பிடித்தது "சீனி கம்". படத்தின் கதை எதாகவேண்டுமானல் இருக்கட்டும், போலித்தனம் நிறைந்ததாகவே இருக்கட்டும் சொல்லுகிற விதம் போரடிக்காமல் கட்டிப்போட்டு பார்க்கவைத்து "கலக்கியிருக்கான்ல" என்று சொல்ல வைத்தால் நல்ல படம் என்று நீங்கள் நினைத்தால் உங்களுக்கும் பிடிக்கும். படத்தில் பயங்கர ஜாலியான குறும்பு கொப்பளிக்கும் வசனங்கள். வசன கர்த்தா கலக்கியிருக்கிறார். அவருக்காகவே பார்க்கலாம். "சக் தே இந்தியா" படமும் பார்த்தேன். விறுவிறுப்பாக கதையில் அவுட் ஆப் போகஸ் ஆகாமல் அழகாக எடுத்திருக்கிறார்கள். முடிவு என்ன என்று தெரிந்தும் படத்தை விறுவிறுப்பாக கொண்டு செல்வது என்பது சவாலான விஷயம் அதில் நன்றாகவே செய்திருக்கிறார்கள். சமீபத்திய நட்பின் காரணமாக இரண்டு நல்ல (குடும்பப்பாங்கான) மலையாளப் படங்களும் பார்த்தேன். ஆக நாளொரு மேனியும் பொழுதொரு படமுமாய் ஓடிக்கொண்டிருக்கிறது.

Wednesday, August 01, 2007

அமைச்சரவை மாற்றங்கள்

மன்னிக்கவும் கொஞ்ச நாளாக பயங்கர பிஸி. இருக்கிற வேலையில் இந்த அமைச்சரவை மாற்றத்தை வேற நடத்தித் தொலையவேண்டியது இருந்தது. இது வரை வழிகாட்டும் தெய்வமாக இருந்த ஏஞ்ஜலினா அம்பாள் லைஃப் டைம் அச்சீவ்மென்ட் அவார்டு வாங்கிக் கொண்டு அப்பீட்டாகிறார். இருந்தாலும் இனிமேல் அவ்வப்போது விசிட்டிங் பேகல்ட்டியாக வந்து கௌரவப் படுத்த வேண்டுதல் விட்க்கப்பட்டுள்ளது. நாளொரு மேனியும் பொழுதொரு இஞ்ச்சுமாக குண்டாகிக் கொண்டிருக்கும் மீரா ஜாஸ்மினுக்கு கேபினட் அந்தஸ்தை ஏன் பறிக்கக் கூடாது என்று ஷோ காஸ் நோட்டீஸ் அனுப்பத் தீர்மாணம் ஏற்றப்பட்டது. அமைச்சரவையில் புதிய அங்கத்தினர் சேர்க்கையும் அங்கீகரிக்கப் பட்டது. அற்புதத் தீவில் பொற்றுபேற்று சாதித்த மல்லிகா கபூருக்கு முக்கிய இலாகா பொறுப்பு ப்ரோபேஷன் முறையில் அளிக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்க சபை கடமைப்பட்டுள்ளது. இதே முறையில் நல்ல சேவை செய்யும் பட்சத்தில் அவருக்கு கூடிய சீக்கிரமே காபினட் அந்தஸ்து வழங்க சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. இந்த முடிவை "போறுமே (கல்யாணமானதிலிருந்து) நீங்களும் உங்க ரசனையும்...காறித் துப்பறதுக்கு ஒருவாய் போதாது" என்று நிரந்தர எதிர்கட்சி தலைவி மனமார (உஷாராக) புகழ்ந்து அங்கீகரித்தார்.

பார்த்தால் இரண்டு வேளை வயிறார சாப்பாடு போட்டு பஸ்ஸுக்கு காசும் கொடுக்கத் தோன்றுவது போல் இருக்கும் திரிஷாவுக்கு அமைச்சரவையில் இடமில்லை என்று கட்சி கொளுகையில் தவறாமல் இருக்கிறது. இதே மாதிரி இருந்தாலும் துள்ளல் நடிப்பில் கொள்ளை கொண்டு கட்சி கொளுகையை கடைபிடிக்கும் அசினுக்கு அடிப்படை அமைச்சர் பதவி வகிப்பதற்க்கு சபை அங்கீகாரம் தெரிவித்தது. கொளுகையை தேசிய அளவில் பரப்பும் முயற்சியாக மாற்றான் தோட்டத்து மல்லிகை ஜெனிலியாவுக்கு கௌரவ அமைச்சர் பதவி வழங்கப்படுகிறது. முத்தழகு ப்ரியாமணிக்கும் கூடுதல் கௌரவ அமைச்சர் பதவி வழங்கவும் ஓப்புதல் தெரிவிக்கப் பட்டது. சபை தெலுங்கு தேச படைப்புகளையும் பார்க்க ஆரம்பித்திருக்கிறது என்பதையும் குறிப்பில் சேர்த்தது.

இதே முறையில் ஈயடிச்சான் காப்பி முறையில் எதிர்கட்சியும் மாற்றங்களை கொண்டு வந்து ஸ்ரிகாந்த் பதவி நீக்கம் செய்யப்பட்டு ப்ரித்விராஜ் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டதையும் சபையின் ஒற்றர் படைத் தலைவர் தெரிவித்தார். "பரவாயில்லை...கல்யாணமாகறதுக்கு முன்னாடி இருந்த அதே நல்ல ரசனை இன்னும் அப்பிடியே இருக்கு.." என்று சபை கை கொட்டி சிரித்து பாராட்டு தெரிவித்தது.

Friday, July 06, 2007

மரண பயம்

"மரண பயம் அவன் கண்களில் தெரிந்தது" -இந்த வரிகளை கதைகளில் படிக்கும் போதெல்லாம் ரொம்ப யோசிக்காமல் காதைக் குடைந்துவிட்டு அடுத்த வரிக்கு தாவிவிடுவேன். ரொம்ப ஃபீலிங்காகயெல்லாம் யோசித்தது கிடையாது. சமீபத்தில் "குப்பி" படம் பார்த்தேன். நல்ல திரைக்கதையுடன் அருமையாக எடுத்திருந்தார்கள். படம் பார்த்துமுடித்த பிறகும் அதை அசை போடவைத்த அழுத்தமான படம். அதைப் பற்றி பிறகு வேறொரு பதிவில். ஆனால் நேற்று தான் மரண பயம் என்றால் என்ன என்று தெரிந்து கொண்டேன். இதை சும்மா சென்சேஷனிஸத்துக்காக இங்கே சொல்லவில்லை உண்மையாவே உணர்ந்து கொண்டேன். லண்டனில் மற்றும் இங்கிலாந்து முழுவதும் கடந்த ஒரு வாரமாக மீண்டும் தீவிரவாதம் குண்டு வைத்தல் என்று களேபரமாக இருக்கிறது. இந்த நிலையில் நகரமெங்கும் கண்காணிப்பு மிகத் தீவரமாக இருக்கிறது.

இந்த நிலையில் நேற்று வழக்கம் போல் ஆபிஸுக்கு லேட்டாக கிளம்பினேன். "மைல் எண்ட்" ஸ்டேஷனில் சென்ட்ரல் லைனில் அவசர அவசரமாக மாறும் போது எதுவும் உறைக்கவில்லை. லண்டன் அண்டர்கிரவுண்ட் ட்ரெயின்களில் அதி வேகத்தில் போகக்கூடிய ட்ரெயின்களில் சென்ட்ரல் லைனும் ஒன்று என்பதால் பொதுவாகவே பீக் நேரத்தில் நல்ல கூட்டம் இருக்கும். நேற்று அவ்வளவாக இல்லாவிட்டாலும் உட்கார இடம் கிடைக்காமல் மிதமான கூட்டத்துடன் இருந்தது. உட்காருபவர்களுக்கு நடுவில் இருக்கும் கம்பியைச் சுற்றி அணைத்த மாதிரி கையைக் கோர்த்துக் கொண்டு எண்டமூரி வீரேந்திரநாத்தின் "இரவே உருவானவள்" புத்தகத்தை படிக்க ஆரம்பித்தேன். ட்ரெயின் நல்ல வேகம் பிடித்து இந்திர லோகத்து அப்சரஸ் ஹரிப்ரியா தேவராஜனுடன் பேச ஆரம்பித்தது விறுவிறுப்பாக போய்கொண்டிருந்தபோது "டொம்" என்று பாம் வெடித்தது போன்ற சத்தத்துடன் ட்ரெயினை தூக்கிப் போட்டது. படித்துக் கொண்டிருந்த புத்தகத்துடன் கம்பியில் இடித்துக் கொண்டு தூக்கிவீசப்பட்டேன். ட்ரெயினில் நின்று கொண்டிருந்த முக்கால் வாசி பேரும் இதே மாதிரி இடம் பெயர்ந்திருந்தார்கள். சென்ட்ரல் லைனின் டணல் மிகக் குறுகலாகக இருக்கும் ட்ரெயினுக்கு வெளியே ஒரு முழத்திற்கு மட்டுமே இடைவெளி இருக்கும். இவ்வளவு குறுகலான டணலில் ட்ரெயின் தாறுமாறுமாக இடித்துக்கொண்டு போக ஆரம்பித்தது. டெரெயினுக்குள்ளே ஒரே புகை மண்டலமாக ஆகிவிட்டது. இதில் தூசு வேறு கலந்து பயங்கர நெடி வேறு. மொத்தம் நாற்பத்தைந்து நொடியிலிருந்து ஒரு நிமிடம் வரை தான் இருக்கும். ட்ரைவர் மிகக் கஷ்டப்பட்டு ட்ரெயினை ஒருவழியாக நிப்பாட்டி விட்டார். நான் ட்ரைவர் கேபினுடன் கூடிய முதல் கேரேஜில் இருந்ததலால் அவர் கேபினில் இருக்கிற எல்லா அலாரமும் அடிப்பது கேட்டது. இந்த நாற்பத்தைந்து வினாடி முழுவதும் ஒரே கூச்சலும் கூப்பாடுமாக இருந்தது. நிறைய பேர் அழ ஆரம்பித்திருந்தார்கள். எனக்குப் கேரேஜில் புகை நிரம்பியவுடன் மரண பயம் வந்துவிட்டது. அகல பாதாளத்தில், கதவுகள் பூட்டப்பட்டு இறங்கக் கூட முடியாத ஒரு சூழலில், கதவை உடைத்து இறங்கினாலும் வெளியே ட்ராக்கில் மின்சாரம் இருக்கும் அபாயத்தில், ட்ரெயினில் தீப்பிடித்தால் சந்தேகத்துக்கு இடமின்றி முடிவு என்ன என்று தெரிந்திருந்தது.

மக்களால் தீயைப் பார்க்க முடியாவிட்டாலும் அடுத்த காரேஜில் தீப்பிடித்திருக்குமோ என்ற நினைப்பில் என்ன செய்வதென்று தெரியாமல் உள்ளே இருந்த கதவு வழியாக அடுத்த காரேஜிற்கு போக ஆரம்பித்தார்கள். அடுத்த இரண்டு நிமிடங்களுக்கு கிலி பிடித்து என்ன செய்வதென்றே தெரியவில்லை. இந்த களேபரத்தில் எங்கள் கேரஜில் ஒரு சின்ன கதவு எப்படியோ தானாகவே திறந்திருந்தது. அதன் பயனாக இருந்த புகை மூட்டம் அடுத்த பதினைந்து நிமிடங்களில் குறைந்தது. இருந்த மயான சூழலில் அழுகைகளையும் விசும்பல்களையும் தவிர யாரும் வாயைத் திறக்கவில்லை. யாரோ கீழே விழுந்திருந்த என் புத்தகத்தை கையில் திணித்தார்கள்.

ட்ரைவர் ஒலிபெருக்கியில் பேச ஆரம்பித்தார். அவர் குரலில் நடுக்கம் தெளிவாக தெரிந்தது. "உங்களைப் போலவே நானும் ஆடிப் போயிருக்கிறேன். ட்ராக்கில் ஏதோ இருந்ததால் ட்ரெயின் தடம்புரண்டிருக்கிறது. நான் கண்ட்ரோல் ரூமிற்கு சொல்லியிருக்கிறேன். அவர்கள் தடங்களில் இருக்கும் மின்சாரத்தை துண்டித்து எமர்ஜென்சிக்கு சொல்லியிருக்கிறார்கள் உதவி வந்துவிடும். கவலை வேண்டாம் யாருக்காவது மிக மோசமாக காயம் இருந்தால் நான் வந்து பார்க்கிறேன்" என்று சொல்லி கொஞ்ச நேரத்தில் வந்தார். அவர் கையில் நடுக்கம் மிக மிக அதிகமாக இருந்தது. தூக்கிப் போட்டதில் யாரோ மோதி சன்னல் கண்ணாடிகள் உடைந்திருந்தன. ஆனால் யாருக்கும் ரத்த காயம் இல்லாதது ஆறுதலாக இருந்தது.

பிறகு நிலமை கொஞ்சம் கொஞ்சமாக நிதானத்துக்கு வந்தது. மக்கள் பரஸ்பரம் நலன் விசாரித்துக் கொண்டார்கள், கையைப் பிடித்துக்கொண்டார்கள். அழுது கொண்டிருந்தவர்களுக்கு ஆறுதல் சொன்னார்கள். ஒரு வயதான அம்மாள் மட்டும் அதிர்ச்சியில் பித்து பிடித்தவர் மாதிரி அப்படியே உறைந்து போயிருந்தார். நானும் சிலரும் அவரைத் தேற்ற முயன்றோம். அடுத்த அரை மணி நேரத்தில் இரண்டு போலிஸ்காரகள் வந்தார்கள். எல்லாரையும் நலன் விசாரித்தார்கள். அவர்கள் ட்ரைவரிடம் சென்று அவரி தேற்றினார்கள்.

அப்புறம் மக்கள் சகஜ நிலைக்கு வர ஆரம்பித்தார்கள். அதுவரை இழவு வீடு மாதிரி இருந்தது அப்புறம் கல்யாணவீடு மாதிரி மாற ஆரம்பித்தது. அழுபவர்கள் மூடை மாற்ற ஜோக் அடிக்க ஆரம்பித்தார்கள். வெவ்வேறு ஆங்கிளில் மொபைல் போனில் ஃபோட்டோ எடுத்துக் கொள்ள ஆரம்பித்தார்கள். கூட்டம் கூட்டமாக கதையடிக்க ஆரம்பித்தார்கள். நான் ஒரு வெள்ளைக்கார மாமி, மற்றும் பாட்டியுடன் அரட்டையடிக்க சேர்ந்து கொண்டேன். வெள்ளக்கார மாமிக்கும் பாட்டிக்கும் நான் பாம் வெடிப்பில் தப்பியது பற்றி சொன்னவுடன் ஒரே ஆச்சரியம். அதைப் பற்றி டாக்குமென்ட்ரியில் நடித்திருக்கிறேன் என்றதும்..ரொம்ப ஈடுபாட்டுடன் பேச ஆரம்பித்தார்கள். இந்த மாதிரி அசம்பாவிதங்களில் என்ன என்ன செய்ய்வேண்டும் என்று டிப்ஸெல்லாம் கேட்க ஆரம்பித்தாரக்ள். உள்ளே தூசி மற்றும் புகையினால் எல்லார் மேலும் கொஞ்சம் கரி படிந்திருந்தது. வெளியே அனேகமாக ஸ்கை மற்றும் பி.பி.ஸிகாரர்கள் இருப்பர்கள் என்று நான் சொன்னதும் மாமி கரியை துடைக்கிற சாக்கில் டச்சப் செய்துகொள்ள ஆரம்பித்தார். நாம முதல் கேரேஜ்ஜில் இருகிறோம், பின்னால் வழியாகத் தான் எவேக்குவேஷனை ஆரம்பிப்பார்கள். நாம் கடைசியில் தான் போவோம் அதற்க்குள் முதலில் வருபவர்களிடம் பேட்டி எடுத்து டெலிகாஸ்டே செய்திருப்பார்கள் என்று நான் சொன்னதும் அவருக்கு பலூனில் காத்து போனது மாதிரி ஆகிவிட்டது. பக்கவாட்டில் இடித்ததால் அவருக்கு இருந்த தோல் வலி ஒருவேளை அதிகமானால் அவரை முதலில் அழைத்துப் போவார்கள், அப்படிச் சென்றால் ஃபோட்டோ பேப்பரில் வர வாய்ப்பு இருக்கிறது என்றதும் அவருக்கு தோல் வலி அதிகரிக்கிற மாதிரி இருந்தது.

அடுத்து தீயணைப்பு வீரர்கள் வந்தார்கள். எமெர்ஜென்ஸி பொரொசீஜர்களுக்குப் பிறகு இன்னும் ஒரு மணி நேரத்திற்க்குள் எல்லோரையும் வெளியேற்றிவிடுவோம் என்று உறுதியளித்தார்கள். அதை பாட்டியால் ஏதோ ஒத்துக்கொள்ள முடியவில்லை. இவர்களை எல்லாம் எங்க ஊரில் ஒரு கேப்டன் இருக்கிறார் "விஜய்காந்த்" என்று பெயர் அவரிடம் டெரெயினிங் அனுப்பவேண்டும், அவர் மீசையை முறுக்கினால் எதிரிகள் விழுவார்கள், வேட்டியை மடித்துக் கட்டினால் எதிகள் பல்டியடிப்பார்கள், பவர் பாயிண்ட்டில் பாமை வெடிக்காமல் செய்வார், வெப் கேம் வைத்துக்கொண்டு எதிரி நாட்டு ராணுவ தளவாடங்களை கண்காணிப்பார், அவரிடம் சொன்னால் ஒத்த சணல் கயிற்றை கட்டி இந்த ட்ரெயினை இன்னொரு ட்ரெயினை வைத்து இழுத்துப் போட்டுவிட்டு கண்ணடித்துக்கொண்டு டூயட் பாடப் போயிருப்பார் என்று சொல்ல நினைத்து சொல்லவில்லை.

அதற்கப்புறம் ஒரு மணி நேரத்தில் எல்லாரையும் வெளியேற்ற ஆரம்பித்தாரக்ள். டணலில் நடந்து வரும் போது அடுத்த டாக்குமென்ட்ரியில் நடிப்பதற்க்கு என்ன கால்ஷீட் பேசலாம், இந்த முறை எப்படி வித்தியாசமாக நடக்கலாம், ஜூ.வி ஃபோட்டொவுக்கு என்ன சட்டை போடுக் கொள்ளலாம் என்று யோசனை செய்துகொண்டே வந்தேன். வெளியே வந்த போது வழக்கம் போல் போர்களம் போல திரும்பிய பக்கமெல்லாம் போலிஸ் ஆம்புலென்ஸ்...எதிர்பார்த்தது போல பி.பிஸி, ஸ்கை எல்லாம் அப்பீட் ஆகியிருந்தார்கள். யாரோ பேனாவும் பேப்பரும் கையுமாக வருவதைப் பார்த்து பேப்பர்காரனாய் இருக்கும் என்று நான் முகத்தை சோர்வாக வைத்துக் கொள்ள, "இருபத்தைந்து ஆக்ஸ்போர்ட் சர்கஸ் பஸ் எந்தப் பக்கம் வரும் தெரியுமா?" என்று கேட்க "போய்யா அந்தப்பக்கம்...நானே இங்க கால்ஷீட் குழப்பத்துல இருக்கேன்..ஆங்....இருபத்தைந்து வரும்... நல்லா வாயில வரும்" என்று கடுப்பாகி... எக்ஸ்பீரியன்ஸுக்கு இந்த உலகத்தில் மதிப்பே இல்லைங்க. அப்புறம் இன்னொரு தொப்பியணிந்த போலிஸ்காரர் வந்து பெயர் மற்றும் அட்ரெஸை எழுதி வாங்கிக் கொண்டார். "லோக்கல் டீ.வியெல்லம் அனுப்பி தொந்தரவு பண்ணிடாதீங்க சார்"ன்னு நான் சொன்னது அவருக்கு புரியவில்லை...தொழிலுக்கு புதுசாக வந்திருக்கும் கத்துக்குட்டியாயிருக்கும் "ஸ்காட்லாந்து யார்ட்" என்று ஏதோ உளறிக் கொட்டிக்கொண்டிருந்தது. ஆபிஸுக்கு லீவு சொல்லிவிட்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தால் "இந்த தரமாவது குடும்பத்தோட தான் நடிப்பேன் இல்லைன்னா கால்ஷீட் இல்லைன்னு கறாரா சொல்லிடுங்க" என்று கறாரா சொல்லிவிட்டார். கால்ஷீட் கேக்கிறதுக்கு முன்னாடி இதையெல்லாம் யோசிச்சிக்கோங்க சொல்லிப்புட்டேன் ஆமா!

மேலும் விபரங்கள் அறிய மேலும் அறிய

Wednesday, June 27, 2007

டைப்பு டைப்பு

"கரும்பு தின்ன யாராவது கூலி கேப்பாங்களா" என்று பிரின்ஸிப்பால் கேள்வி கேட்ட போது எங்களுக்கு ஒரு இழவும் புரியவில்லை. ஒன்பதாவது படித்துக் கொண்டிருந்தோம். ப்யூன் முருகன் சம்பந்தமே இல்லாமல் ஒரு பத்து பேரை பெயர் வாசித்து பிடித்துக் கொண்டு நிப்பாடியிருந்தார். இதில் இரண்டு பெண்கள் வேறு அடக்கம். தனியாக கூப்பிட்டிருந்தால் பெல்லி டான்ஸர் மாதிரி நடுங்கிக் கொண்டிருந்திருப்பேன். கூட்டத்தோடு கோவிந்தா போடுவதில் நிறைய எக்ஸ்பீரியன்ஸ் போட்டிருந்ததால் "யாருடா இங்க பிரின்ஸிப்பால்" தெலுங்கு பட ஹீரோ மாதிரி பராக்கப் பார்த்துக் கொண்டிருந்தேன். வழக்கம் போல பிரின்ஸிப்பால் இரண்டு நிமிடம் சொற்பொழிவாற்றிய பிறகு தான் விஷயம் புரிந்தது. நாங்கள் எல்லோரும் ஸ்கூல் சார்பாக டைப்ரைட்டிங்கில் லோயர் பரீட்சை எழுதவேண்டும்.

எங்கள் ஸ்கூல் சுற்றுவட்டாரத்திலயே கொஞ்சம் பெரிய ஸ்கூல் ஆகையால் நிறைய எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்டிவிடீஸ் இருக்கும். அதில் ஒன்று டைப்ரைட்டிங் க்ளாஸ். எங்கள் தெருவிற்கு அடுத்த தெருவில் இருந்த விமலா டீச்சர் தான் வந்து சொல்லிக் கொடுத்துக்கொண்டிருந்தார். பார்ப்பதற்கு "விதி" திரைப்பட மனோரமா மாதிரி தான் இருப்பார். பேச்சும் மேனரிஸமும் அதே மாதிரி தான். கொஞ்சம் படபடவென்று பேசுவார் ஆங்கிலத்தில் பேசினால் ஆஃப் ஆகிவிடுவார்.. "ஏ பாய் கோ பாய் தேர், ஏ கேர்ல் கோ கேர்ல் தேர்" என்பதை மட்டும் அதிகாரத்தோடு ஆணையிடுவார். அதற்கு மேல் "எஸ் நோ" மட்டும் தான் பதிலாக வரும். அதனால் பள்ளியில் தமிழில் பேசக்கூடாது என்றிருந்த சட்டம் டைப்ரைட்டிங் க்ளாசில் மட்டும் வாய்தா வாங்கும்.

விமலா டீச்சருக்கு ஆங்கிலம் பற்றிய ஆதங்கம் நிறைய உண்டு. டீச்சருக்கு "மேம்" என்று கூப்பிட்டால் பெருமை எருமையில் ஏறிவிடும். கண்ணாடியை தூக்கிவிட்டுக்கொண்டு "யெஸ்ஸ்ஸ்" என்று ஸ்டைலாக உடனே வந்து சொல்லிக்கொடுப்பார். விமலா மேம் மட்டும் பரீட்சைக்கு சூப்பர்விஷன் போட்டால் பசங்கள் ஆங்கிலத்திலேயே அவரிடம் பேசுவது மாதிரி மற்றவர்களிடம் விடை கேட்பார்கள். விடை தெரிந்தவர்களும் அதே மாதிரி அவரிடம் பேசுவது போல் பதில் சொல்லுவார்கள். அப்புறம் மேம்க்கு சந்தேகம் வந்து "ஏ பாய் கோ பாய் தேர்" என்று உட்காரச் சொல்லிவிடுவார்.

ஒன்பதாவது வகுப்பில் மட்டும் தான் இந்தக் க்ளாஸ். அதனால் பசங்களுக்கு டைப் மெஷினை பார்த்தவுடன் கையும் காலும் பரபரக்கும். அனேகமா க்ளாஸில் எல்லோருமே ஒரு விரல் கிருஷ்ணாராவ் தான். ஆள்காட்டி விரலை வைத்துக் கொண்டு லொட்டு லொட்டு என்று அடி பின்னி எடுத்துவிடுவார்கள். "மேம் க்யூ எங்க மேம் இருக்கு, எம் எங்க மேம் இருக்கு" என்பது ரீதியான டவுட்டுகள் தான் பசஙக்ள் விமலா மேமிடம் கேட்பார்கள். அதில் பெரும்பான்மை ஹாஸ்டல் பையன்கள் - வீட்டிற்கு எழுதும் லெட்டருக்கு லொட்டி லொட்டி அட்ரஸ் அடிப்பார்கள்.

எனக்கு பிற்காலத்தில் நான் பெரிய ஆபிஸராக ஆகிவிடுவேன் என்று தெரியுமாகையால் என்னுடைய பியானோ, மற்றும் ட்ரம்ஸ் ஆசையை எல்லாம் டைப் மெஷினில் தான் தீர்த்துக் கொள்வேன். பேசிட், ரெமிங்டன் என்று இரண்டு விதமான மெஷின்கள் இருந்தன. பேசிட் அடிப்பதற்கு வசதியாக இருக்கும் ஓடாது. ஆனால் ரெமிங்டன் பூப்போல நழுவும். ஒழுங்காக அமுக்காவிட்டாலும் ஓடிவிடும். ஆனால் "ராஜா ராஜாதி ராஜா" பாட்டுக்கு ரெமிங்க்டன் மிஷினில் தான் கரெக்டாக டைப் தாளம் போட முடியும். பேசிட் மெஷினில் "மாசி மாசம் ஆளான பொண்ணு மாமன் உனக்குத் தானே" பாட்டுக்கு மட்டும் தான் கரெக்டாக வரும். அதனால் அந்த பாட்டுக்கு மட்டும் பேசிட்டுக்கு மாறிக்கொள்வேன்.


டீச்சர் அடப்பாவிகளா இப்படியெல்லாம் அடித்தால் ட்ரம் போய்விடும் என்று கண்ணீர்விடுவார். கேட்டால் தானே. ஆனாலும் மெஷின்கள் ஸ்கூல் மெஷின்கள் என்பதால் சத்தம் போடுவதோடு நிப்பாட்டிக் கொள்வார். ரொம்ப அதிகமானால் "ஏ பாய் ஐ கோ பிரின்ஸிப்பால்" என்று மிரட்டுவார். எங்கள் பிரின்ஸ்பாலுக்கு ஸ்கூல் மேல் அதிக பாசம். நாங்கள் டைப்ரைட்டிங்கில் பிரித்து மேய்கிறோம் என்று டீச்சரை கூப்பிட்டு டைப்ரைட்டிங் லோயர் பப்ளிக் எக்ஸாம் எழுத பத்து பெயரை தயார் செய்யச் சொல்லிவிட்டார். டீச்சர் பிள்ளையார் சுழி போட்டு "யாரெல்லாம் எழுதப் போறிங்கன்னு" கேட்க லிஸ்ட் பிள்ளையார் சுழியுடன் நின்றி விட்டது. என்னாங்கடா விளையாடறீங்கன்னு மானாவாரியா பெயர் எழுத ஆரம்பித்துவிட்டார். "மேம் எனக்கு விரல்ல ப்ளட் கேன்சர்" என்று நான் எவ்வளவோ மன்றாடியும் டீச்சர் கேட்கவில்லை.

அடுத்த கட்ட நடவடிக்கையாக "ஐ கோ பிரின்ஸிப்பால்" என்று பிரின்ஸிபாலிடமும் போட்டுக்கொடுத்துவிட்டார். எப்பொழுதும் பீட்டர் மட்டுமே விடும் பிரின்ஸியும் அன்று கரும்புக்கென்ன கூலி எறும்புக்கென்ன வேலின்னு பழமொழியெல்லாம் சொல்லி "ஐ வாண்ட் சென்ட் பர்சன்ட் ரிசல்ட். சென்ட் பெர்சன்ட் ரிசல்ட் வாங்காட்டா அப்புறம் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது, என்பேச்சை நானே கேக்க மாட்டேன்" என்று தமிழ் பட ஹீரோ மாதிரி மிரட்ட ஆரம்பித்துவிட்டார். வீட்டுக்கு வந்து மாமாவிடம் போட்டுப் பார்த்த "எக்ஸாம் ஃபீஸ் முப்பது ரூபாய்" ட்ரம்ப் கார்டும் வொர்க் அவுட் ஆகவில்லை. பிற்காலத்தில் டைபிஸ்ட் ஆவதற்காவது உபயோகமாக இருக்கும் என்று வழக்கம் போல "நல்ல கவனமா படி, கவனம் சிதறக்கூடாது" நேயர் விருபம் ஓட ஆரம்பித்துவிட்டது. கவனமா படிக்கலாம் ஆனால் "மாசி மாசம் ஆளான பொண்ணு" பாட்டெல்லாம் லோயர் பரிட்சை சிலபஸில் இல்லை மாமாவிடம் விளக்கியதில் அடுத்த தெருவில் இருக்கும் டீச்சர் வீட்டுக்கு அடிஷனல் க்ளாஸ் போகச் சொல்லிவிட்டார்.

நானும் இன்னொரு நண்பனும் டீச்சர் வீட்டுக்கு ட்யூஷன் போக ஆரம்பித்தோம். டீச்சர் வீட்டில் சொந்த மிஷின் என்பதால் ரொம்ப ஸ்ட்ரிக்ட். போதாதற்கு டீச்சர் வீட்டுக்காரர் வேறு இருப்பார். அவர் தான் அங்கு மெஷினுக்கெல்லாம் ஆல் இன் ஆல் அழகுராஜா. முதல் நாளே "மாசி மாசம்"க்கு தடா போட்டுவிட்டார்.ஸ்கூலுக்குப் போகவேண்டும் என்பதால் காலை ஆறு மணிக்கு க்ளாஸ். தூக்கக் கலக்கத்துடன் போய் கதவைத் தட்டினால் டீச்சர் வீட்டுக்காரர் தான் பல்தேய்க்காமல் வந்து கதவைத் திறப்பார். அதே ஊசல் வாய் நாற்றத்துடன் வந்து மெஷின் கவரை எடுத்து பேப்பர் போட்டுக் கொடுக்கும் போது வீட்டில் குடுத்த காப்பி குமட்டிக் கொண்டு வரும். டீச்சர் அவருக்கு நேர்மாதிரி. கொல்லைப் புறத்தில் அவர் பல் தேய்க்கும் போது "ஊவ்வ்வ்வ்ழ்ழ்....ழ்ழ்ழ்ழ்ழ்" என்று போடும் சத்தத்தைக் கேட்டால் நாக்கை கழற்றி வைத்துவிட்டு சிறுகுடல் வரைக்கும் பல் தேய்க்கிறாரோ என்று எங்களுக்கு சந்தேகம் வரும்.

ஒருவழியாக ஏ. எஸ்.டி. எஃப்.ஜி.எஃப் ஸ்பேஸ்பார் செமிகோலன் எல்.கே.ஜே.ஹெச்.ஜே சொல்லிக் கொடுப்பதற்க்குள் டீச்சருக்கு தாவு தீர்ந்துவிட்டது. கொஞ்சம் படிப் படியாக முன்னேறி ஒரு பாசேஜ் குடுத்து பார்த்து அடிக்கச் சொன்னார். முடித்து திருத்தும் போது பேப்பர் ரத்தக் களறியாக இருக்கும். "எப்பா இப்படியெல்லாம் அடிச்சா தேறாதுப்பா" என்று சின்சியராக சொல்லுவார். ஞாயிற்றுக் கிழமையும் போக ஆரம்பித்தோம். அப்புறம் கொஞ்ச நாள் கிரிக்கெட் மேட்ச் இருக்கும் நேரத்துக்கெல்லாம் களாஸ் நேரத்தை மாற்றிக் கொண்டு கிரவுண்டில் போய் டைப்படித்தேன்.

முடிவாக எங்கள் பள்ளியிலிருந்து லகான் மாதிரி பத்து பேரும் போய் லோயர் டைப் பரீட்சை எழுதினோம். ஊரிலிருந்த ஒரு பெரிய அரசுப் பள்ளியில் பரீட்சை. டைப் பரீட்சைக்கும் யூனிபார்ம் அணிந்து கொண்டு போக வேண்டும் என்று எங்க ப்ரின்சிப்பால் இட்ட கட்டளையினால் நல்ல பள்ளியிலிருந்து வந்த மாணவர்கள் என்று கொஞ்சம் மரியாதை கிடைத்தது. பாஸாகி வேலைக்கு போக வேண்டும் என்று லட்சிய வெறியோடு வந்திருந்த கூட்டத்திற்கு நடுவில் கூச்சமாகத் தான் இருந்தது. மொத்தம் பத்தோ பதினைந்தோ நிமிஷம் தான். ஒரு பத்தி குடுத்திருப்பார்கள். அதை அடிக்க வேண்டும். சுப்பர்வைசர் விசில் ஊதியவுடன் தட தடவென்று எல்லோரும் அடிக்க ஆரம்பித்தார்கள். மூன்று நிமிடம் கழித்துத் தான் பார்த்தேன். பேப்பர் நேராக லோட் செய்யவில்லை. டைப்ரைட்டரையும் குடுத்திருந்த பாசேஜையும் மட்டுமே பார்த்து அடித்ததில் பேப்பர் கீழே விழுந்தது கூட தெரியவில்லை. "நீயெல்லாம் பாஸ் பண்ணின மாதிரி தான் " என்று சுப்பர்வைசர் வந்து நக்கலாக எடுத்துக் கொடுத்தார்.

இரண்டு வாரங்கள் கழித்து ரிசல்ட் வந்தது. மிக ஆறுதலாக பிரின்சிபால் கேட்ட மாதிரி பரீட்சை எழுதிய பத்து பேரும் செண்ட் பர்சண்ட் ரிசல்ட் வாங்கியிருந்தோம். எல்லோருக்குமே ஊத்திக்கிச்சு. ஒருவேளை அவன் பாஸாகிடுவானோ இவன் பாஸாகிடுவானோ என்றிருந்த சந்தேகமும் ஒழிந்து மீண்டும் ஒரு கூட்டுப் பறவைகளாகி திரும்பவும் "மாசி மாசம் ஆளான பொண்ணு" ப்ராக்டிஸ் செய்ய ஆரம்பித்துவிட்டோம். அடுத்த பரீட்சை வருவதற்குள் பத்தாவது போய்விட்டதால் மாமாவுக்கு முப்பது ரூபாய் மிச்சமாயிற்று.

Friday, June 22, 2007

எட்டு விளையாட்டு

நம்ம கொத்ஸ் வழக்கம் போல என்னை மாட்டி விட்டிருந்தார். இது வரை வந்த செயின் விளையாட்டுகளிலே என்னை ரொம்பவும் மிரட்டின விளையாட்டு இதுவாகத் தான் இருக்கும். ஒவ்வொருத்தரும் போட்டிருக்கும் சாதனைகளையும் படிக்கும் போது ....கண்ணைக் கட்டிருச்சி...ஆத்தி நம்ளால முடியாதுப்பூ....

நான் எதுவும் எதையும் சாதித்ததாக நினைக்கவில்லை...(ஆனால் நம்பிக்கை இருக்கு பின்னாளில் சாதிப்பேன் என்று மட்டும் சொல்லி சமாளித்துக் கொள்கிறேன் ) அதனால ஐய்யா கொத்ஸ் நம்ம மன்னிச்சிருங்க...நம்ளால இந்த ஆட்டத்துல முடியாது...உத்தரவு வாங்கிக்கிறேன்.

Monday, June 18, 2007

டைவேர்ஸ் வாங்கலாம் வாங்க

கல்யாணமான புதிதில் வெளிநாட்டில் கார் ஓட்டக் கற்றுக்கொண்டு, லைசன்ஸ் வாங்கி, பெண்டாட்டியை முன் சீட்டில் உட்கார வெச்சு "இந்தாம்மா ராஜாத்தி இந்த மேப்பைப் பார்த்து கொஞ்சம் வழி சொல்லும்மா கண்ணு"ன்னு சொல்லிட்டு ஓட்ட ஆரம்பித்தோம் என்றால் போற இடத்துக்கு போய் சேருவோமோ இல்லியோ பெரும்பாலும் வழியிலயே வக்கீலைப் பார்த்து டைவேர்ஸ் அப்ளிகேஷன் குடுத்தாலும் குடுத்திருவோம். அதுவும் சந்தும் பொந்துமா புகுந்து போற ரூட்டுக்கு மேப்ப பார்த்து வழி சொல்லச் சொன்னா வள்ளலார் பொண்டாட்டி கூட விதிவிலக்கு கிடையாது. போற வழி ஃபுல்லா ஒரே லவுஸ்தான் போங்க.

நான் லைசன்ஸ் வாங்கின புதுசுல நடந்த அலம்பல் கொஞ்ச நஞ்சம் கிடையாது(இப்பவும் ஒன்னும் குறைச்சல் இல்லை). ரொம்ப நாள் வரைக்கும் ரவுண்ட் அபவுட்டுக்கு பயந்தே இருக்கிற டவுண விட்டு வெளிய போகவே இல்லை. எல்லைச்சாமி காவல் கிடக்கிற மாதிரி ஒரு எல்கைக்கு உள்பட்டே கார ஓட்டுவது என்று கொள்கை வைத்திருந்தேன். இதுல ரெண்டு தெரு தள்ளி இருக்கிற கடைக்குப் போகனும்னா கூட தங்கமணி முன்னாடி சீட்டில் உட்கார்ந்து கூடை பின்ன ஆரம்பித்து விடுவார். அடப்பாவி மக்கா இதெல்லாம் உனக்கே அடுக்குமா இந்த கார மெனுபாக்ஃசர் செஞ்சவன் பார்த்தா கண்ணீர் விடுவான்மான்னு சொல்லியும் கேக்கிற மாதிரி இல்ல. என் பெண்ணுக்கு வேறு நான் போகிற ரூட்டு போரடிக்க ஆரம்பித்து விட்டது. சரி கொளுகையை கொஞ்சம் தளர்த்தி நேர் கோட்டில் நூல் பிடிச்ச மாதிரி இருக்கிற அடுத்த ஊருக்கு போயிட்டு வருவோம்ன்னு ஒரு நாள் கிளம்பி போய் அதுவும் விபரீதமாகி தொலைந்து போய் அந்த இடத்துல இருக்கிற நண்பருக்கு போன் போட்டு அவர் வந்து வழிகாட்டி "இருந்தாலும் இந்த ரூட்டுல கூட தொலைஞ்சு போறதுக்கும் ஒரு திறமை வேணும்ன்னு" என்று வழிகாட்டியதோடு குடும்பத்தில் விளக்கேற்றியும்வைத்து விட்டுப் போய்விட்டார். விளக்கு பற்றி எரிந்து ஒரே லவ்ஸாகிவ்ட்டது.

அப்புறம் சமாதானமாகி ரவுண்டபவுட்டில் ஒரு பரிகாரத்தை பண்ணி விட்டு திரும்பவும் எங்க எல்லைக்கு உள்ளயே வலம் வர ஆரம்பித்தோம். அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா தேறி எல்லா இடங்களுக்கும் சென்று வர ஆரம்பித்தோம். ஆனாலும் போகிற வழியில் ஏகப்பட்ட லவ்ஸ் கண்டிப்பாக இருக்கும். இண்டர்நெட்டில் போகவேண்டிய இடத்துக்கு ஸ்டெப் ஸ்டெப்பா வழி சொல்லும் தளங்களிலிருந்து வழியை எடுத்துக் கொண்டு போனாலும், ரெண்டு ஸ்டப்பை முழுங்கிவிட்டு முந்தின லெஃப்டிலேயே ரைட்டுக்கு வழி சொல்லும் போதும், இந்தப் பக்கம் திரும்பனும் என்று விரல் ஒரு திசையும் விரலுக்கிடுக்கில் இருக்கும் பேனா நேரெதிர் திசையிலும் வழி காட்டும் போதும், பாதி தூரம் வரைக்கும் ஸ்டான்ஸ்டட் ஏர்போர்ட் குறியீட்டைப் பார்த்து போகனும் என்று சொன்னால், எதுவரைக்கும் என்று தெரியாமல் ஸ்டேன்ஸ்டட் ஏர்போர்ட்டையே முழுவதும் பார்த்துக் கொண்டு போய் நேரே ஸ்டேன்ஸ்டட் ஏர்போர்டில் பார்க் செய்துவிட்டு, "நீ தானே சொன்ன?" என்று பழியை நைஸாக மாற்றிப் போடும் போதும், போட்டிருக்கும் ரூட்டுக்கும் போற ரூட்டுக்கும் சம்பந்தமே இல்லையே என்று வெளியாளிடம் வழி கேட்டால்...நல்லவேளை வழி கேட்ட இன்னும் அஞ்சு நிமிஷம் நேரா போய் பீச்சாங்கை பக்கம் திரும்பினா ஃபிரான்சே வந்திரும்" என்ற எகதாளத்தை கேட்டுக்கும் போதும், "போதும்டா சாமி வழி சொல்லி சொல்லி...அடுத்த ஜென்மத்துல பஸ் ட்ரைவர் பொண்டாட்டியாவோ இல்லை காருக்கு தனியா செஃப்பார்(ட்ரைவர்) வெச்சிருக்கவன் பொண்டாட்டியாவோ தான் வாக்கப்படனும்...கார்ன்னு தான் பேரு, ஏறினோமா ஜாலியா பராக்கப் பார்த்தோமா..பாட்டு கேட்டோமான்னு இருக்கா...வீட்டில தான் போறாதுன்னா இங்கயும் இந்த இழவ கட்டி அழவேண்டியிருக்கு" என்ற அங்கால்ய்ப்பைக் கேட்கும் போதும் காரைச் சொல்லுகிறாளா இல்லை நம்மைத் தானா என்பது விளங்காவிட்டாலும் விவேகானந்தர் ஏன் கல்யாணம் பண்ணிக்கொள்ளவில்லை என்பது விளங்கியது.

இல்ல எங்களுக்கு இந்தப் பிரச்சனையெல்லாம் இல்லை...நாங்க இப்போ சேட்நேவ் வாங்கிட்டோம்ன்னு சொன்னீங்கன்னா அடுத்த பரீட்சை ஜோடிப் பொருத்தம் போட்டியில் தான். இங்கயும் டைவேர்ஸ் எக்ஸ்பிரெஸ் சர்வீஸ் தான். கல்யாணமான புதிதில் கசகசவென்று எப்பவும் வியர்த்து கொட்டுகிற சென்னையின் கொதிக்கிற வெய்யில் கூட ஏஸி போட்ட தேவலோகமாக தெரிந்த பெரியவர்கள் சொன்ன முப்பது நாள் கெடுவில் இருந்த காலத்தில், ஆபிஸில் ப்ளாகெல்லாம் இல்லாத நேரத்தில் நாங்களெல்லாம் உழைத்து ஏதோ லாபம் பார்த்துவிட்டார்கள் என்று ஒரு நாள் கொண்டாட்டம் ஏற்பாடாகியிருந்தது. கொண்டாட்டம்ன்னா பாட்டு பாடினோமா ஆட்டம் ஆடினோமா, கண்டபடி தின்னோமா கக்கூசுக்குப் போனோமான்னு இல்லாம போட்டி வைக்கிறேன்னு ஜொடி பொருத்தம் வேற வைச்சுட்டாங்க.

நான் ஆபிஸில் வழக்கமாக கடலை போடும் பெண்களெல்லாம் இதை விட்டா சான்ஸ் கிடைக்காது என்று எங்கள் பெயரை கொடுத்து மொத்தமாக பழிவாங்கிவிட்டார்கள். இதில் கொடுமை என்னவென்றால் ஆபிஸில் காதலித்துக் கொண்டிருந்தவர்களும் இந்தப் போட்டியில் கலந்து கொண்டார்கள். காதலிக்கும் வேகமென்ன கல்யாணமான சோகம் என்ன..இரண்டும் போட்டி போடமுடியுமா? போட்டி நடத்தினவர்கள் முதல் ரவுண்டில் டெஸ்ட் எழுதச் சொல்லிவிட்டார்கள். கேள்விகளை பார்த்த உடனேயே நம்ம லட்சணம் தெரிந்துவிட்டது. பெண்டாட்டியின் பிறந்தநாளை கேட்டாலே பாத்ரூமில் தாள்பாழ் போட்டுக்கொண்டு பத்து நிமிஷம் யோசிக்கனும் இந்த லட்சணத்தில் மாமியாரின் பிறந்தநாளைக் கேட்டிருந்தார்கள். என்னம்மோ தெரிந்து மறந்த மாதிரி ரொம்ப யோசித்ததில் பத்தாவது பரீட்சையில் நியாபகத்துக்கு வராத இந்திய நேஷனல் காங்கிரஸ் ஆரம்பித்த தேதி முதற்கொண்டு புலப்பட்டதே தவிர இதற்கெல்லாம் வழியே தெரியவில்லை. அடுத்து மாமனார் மாமியாரின் கல்யாண நாள் கேட்டிருந்தார்கள். சரிதான்..இதெல்லாம் ஒரு மார்க்கமாய் போகிறது..நமக்கு ஆவுறதுக்கில்லை என்று எனக்கு தெரிந்து விட்டது. சரி வழக்கம் போல நம்ம திறமைய காட்ட வேண்டியதுதான்னு பக்கத்துல உட்கார்ந்திருந்தவனப் பார்த்து பிட் அடித்துவிட்டேன்.

காதல் பண்ணிக்கொண்டிருந்த ஜோடியைத் தவிர என்னை மாதிரி கல்யாணமான கபோதிகள் எல்லாரும் திரு திரு தான். போட்டி நடத்துபவர்கள் இந்த சங்கடங்களையெல்லாம் பொருட்படுத்தாமல் "டைம் அவுட்" சொல்ல, அதான் கல்யாணமான அன்னிக்கே தெரியுமேன்னு பேப்பரை கொடுத்துவிட்டேன்.போட்டி நடத்தினவர்கள் ஏதோ பொழச்சு போகட்டும்ன்னு விடாமல் எல்லார் விடைகளையும் மைக்கில் கப்பலேத்த ஆரம்பித்துவிட்டார்கள். நல்லவேளை தங்கமணியும் என்னை மாதிரி சுதந்திர தின தேதிகளை போட்டிருந்ததால் தப்பித்தேன். ஆனால் அடுத்த ரவுண்டில் தங்கமணிக்கு பிடித்த கலரென்ன...தங்கமணியிடம் எத்தனை ஜோடி செருப்பு இருக்குன்னுலாம் ரொம்ப டெக்னிக்கலாய்ப் போய்விட்டார்கள். செருப்பு ஜோடி பிரச்ச்னையில் மேடையிலேயே "அடி செருப்பால" ரெண்டு மூனு ஜோடி தகராறு ஆரம்பித்துவிட்டது. அடேய் எங்கப்பா!! இந்த மாதிரி போட்டியில முக்கியமான இடத்துல தப்பு விட்டோம்ன்னா பெண்டாட்டிகள் அப்பிடியே சிரித்துக்கொண்டு கண்ணால் ஒரு பார்வை பார்ப்பார்கள் பாருங்கள், பிரகாஷ் ராஜெல்லாம் பிச்சைவாங்கணும்.

இங்கே லண்டனிலும் போன பொங்கல் பார்ட்டியில் இந்த மாதிரி ஒரு போட்டியை தோழி உமா அண்ட் தீபா நடத்தினார்கள். ஜாலியாக இருந்தது(உஷாராக அவர்கள் இரண்டு பேரும் கல்ந்து கொள்ளவில்லை என்பது வேறு விஷயம்). முதல் இரண்டு ரவுண்டுகள் சேர்ந்து பலூன் ஊதுவது, பொட்டு வைப்பது என்று ஈஸியாக இருந்தது. அதெல்லாம் இடது கையாலயே அசால்ட்டா செய்வோம்ல. டாப் ஐந்தில் தேறி ஒரு வேளை நமக்கும் ஜோடிப் பொருத்தம் இருக்கிறதோ என்று எங்களுக்கே சந்தேகம் வந்துவிட்டது. அடுத்த ரவுண்டில் மனைவி கணவனுக்கு டையும், கணவன் மனைவிக்கு புடவையும் கட்டி விட வேண்டிய சேலஞ்சிங்கான ரவுண்ட். (புடவை - ஏற்கனவே அணிந்திருக்கும் ஆடைக்கு மேல் தான்யா). புடவை கட்டத் தெரியுமென்றாலும் அனுபவம் ப்ளீட் வைப்பது வரை தான் என்பதால் புட்டுக்கிச்சு. நல்ல வேளை தப்பித்தோம் அடுத்த ரவுண்டில் உங்கள் மனைவியை நீங்கள் முதன் முதலாக சந்தித்த போது என்ன கலர் நெயில் பாலீஷ் போட்டுக்கொண்டிருந்தார் போன்ற ஆப்பு வைக்கும் கேள்விகள் கேட்டு பெண்ட் நிமிர்த்திவிட்டார்கள். ஏற்கனவே இன்னமும் வீட்டில் அதெப்படி "சலங்கை ஒலி" ஜெயப்பிரதா புடவை கலர் மட்டும் நியாபகம் இருக்கும்? ஆனா நீங்க வாங்கிக் கொடுத்த தலை தீபாவளி புடவைக் கலர் மட்டும் மறந்து போகும்?"ன்னு ட்ரில் வாங்கிக் கொண்டிருக்கிறது. நமக்கெல்லாம் விட்டுலயே டெய்லி ஜோடிப் பொருத்தம் டெஸ்ட் தான்.

பி.கு - வருத்தப்படாத வாலிபர் சங்கம், கவலைப் படாத காரிகையர் சங்கம், பயமறியா பாவையர் சங்கம்ன்னு எல்லோருக்கும் சங்கம் இருக்கு. ஹூம் நானும் "கல்யாணமான கபோதிகள் சங்கம்"ன்னு ஒன்னு ஆரம்பிக்கலாமான்னு யோசிக்கிறேன். என்ன சொல்றீங்க?

Friday, June 15, 2007

Sivaji - The Boss

கதையைச் சொல்லவில்லை தாராளமாகப் படிக்கலாம்.
இந்தப் படமெல்லாம் இன்டர்நெட்டில் டவுண்லோட் செய்ய கிடைக்குமென்று சத்தியமாக நினைக்கவே இல்லை. கூகிளில் தலைகீழாக தேடிப்பார்த்தும் மாட்டவில்லை. இந்த ப்ளாக் நண்பர் மூலமாக டவுண்லோட் லிங்கை கிடைத்தவுடனேயே கை பரபரக்க ஆரம்பித்துவிட்டது. இந்தப் படம் மற்றுமொரு ஃபார்முலா படமாக இருக்காது என்று நம்பினேன்.ஆனால் இந்தப் படம் மிகப் பெரிய ஏமாற்றம்.

ஆரம்பம் எதிர்பார்த்த மாதிரி பிரமாண்டமாக இருக்கிறது. எதிர்பார்த்து போல் தலைவர் தடாலடி என்ட்ரி குடுக்கிறார். பார்த்த சில சீனக்ளின் கெட்டப்பை பார்த்த போது சரி தல அலட்டலில்லாத நடிப்பில் கலக்கியிருப்பார் என்று நம்பினேன். முழுவதுமில்லாவிட்டாலும் பல இடங்களில் ஏமாற்றவில்லை. ஆரம்பப் பாடலே மயிலாட்டம் ஒயிலாட்டம், கரகாட்டம், குரங்காட்டம் என்று கூட்டம் கூட்டமாக ஜால்ரா பாட்டு பாடுகிறார்கள். பாடல் முடிந்தவுடன் நம்ம டவுண்லோட் மக்கர் பண்ண ஆரம்பித்துவிட்டது. அடப்பாவி மக்கா மூனு ஜி.பி ராத்திரி முழுவதும் டவுண்லோட் ஆகிசொதப்புகிறதே என்று பதறிப் போய் நோண்டி நொங்கெடுத்து ஒரு வழியாக படத்தை சரி பண்ணி விட்டேன்.

படத்தில் மிகப் பெரிய சொதப்பல் அழுகை தான். இந்த மாதிரி படங்களில் அழுகை சென்டிமென்டையெல்லாம் ஓரம் கட்டி எடுக்கவேண்டாமோ? இயக்குனரின் பிற படங்களைப் பார்த்து அவர் மேல் மிகுந்த மரியாதை வைத்துப் பார்த்த படம் இது. ஆனால் சொதப்பலுக்கு காரணம் பட்ஜெட்டாக இருக்கலாம். தேவைக்கு செலவழிக்காத படமும் அதிகமா செல்வழிக்கற படமும் ஜெயிக்கவே ஜெயிக்காதுன்னு சும்மாவா சொன்னாங்க. தலைவர் படத்தில் வில்லன்கள் தலைவருக்கு இணையாக பட்டயக் கிளப்ப வேண்டாமா? சொதப்பலிலும் சொதப்பல். மிகப் பெரிய சோகம்.

தலைவர் நடிப்பையும் லக்ஷ்மி நடிப்பையும் தவிர மத்ததெல்லாம் ரொம்ப சுமார் ரகம் தான். ஆர்.எஸ்.மனோகர் சும்மா பேண்டுக்கு மேல் பாவாடை கட்டிக் கொண்டு படிகளில் ஸ்டைலாக வருகிறாரே தவிர அவர் திறமையை மொத்தமாக வீணடித்திருக்கிறார்கள். ராஜ ராஜ சோழன் கதையை எடுத்திருப்பார்கள் என்று எதிர்பார்த்தால் காமெடி செய்திருக்கிறார்கள். ஆரம்ப காட்சியில் கோயில் கட்டுவதிலிருந்து ஆரம்பிக்கிறார்கள். ஆனால் அதுக்கப்புறம் அதைப் பற்றி மூச்சே விட வில்லை. சென்ற முறை இந்தியா சென்ற போது இந்தக் கோயிலை பார்த்ததிலிருந்து இதன் வரலாறு பற்றி வீடியோ பார்க்க ஆசையாய் இருக்கிறது. "ராஜ ராஜ சோழன்" - படம் அந்த ஆர்வத்தை எள்ளவும் பூர்த்தி செய்யவில்லை.நடிப்பில் Sivaji - The Boss ஒத்துக்கலாம். படத்தில் மத்ததெல்லாம் வேஸ்ட்.

ராஜராஜ சோழன் டவுண்லோட் லிங்க் கொடுத்த அனானி நண்பருக்கு ரொம்ப ரொம்ப நன்றி.

பி.கு - சிவாஜி படம் ஃபர்ஸ்ட் டே பர்ஸ்ட் ஷோ பார்த்துட்டு பாதி ராத்திரிக்கு டெக்ஸ் மெசேஜ் அலம்பலா பண்றீங்க...தசாவதாரம் வரட்டும்டீ...உங்களுக்கு இருக்குடி :))

Thursday, June 07, 2007

அந்த மூன்று நாட்கள்

சின்ன வயதில் நிறைய சந்தேகம் வரும் எனக்கு. விளக்கில் ஏன் விளகெண்ணையை ஊற்றாமல் நல்லெண்ணையை ஊற்றுகிறார்கள், ஆரஞ்சுப் பழக் கொட்டையை முழுங்கி விட்டால் வயற்றிலிருந்து செடி வளருமா, பசுஞ் சாணியில் மின்னல் இறங்கினால் தங்கமாக மாறுமாமே எப்படி என்று ஏகப்பட்ட சந்தேகங்கள். இவற்றில் தலையாயதாக இந்தது 'மாதவிடாய்' என்றால் என்ன என்பது தான். வீட்டில் அக்காக்களுடன் பிறந்தவனாகையால் இந்த பெண்கள் சமாச்சாரம் நிறையவே அடிபடும். ஆனால் பரிபாஷையில் குசுகுசுவென்று பேசிக்கொள்ளப்படும் இந்த விஷயத்தை டீகோட் செய்வதற்கு நிறைய பிரயத்தனப் படவேண்டியிருக்கும். வீட்டுக்கு விலக்கு, தீட்டு என்று தமிழிலும், அவுட் ஆஃப் டோர், ப்ரீயட்ஸ் என்று ஸ்டைலாக ஆங்கிலத்திலும் சொல்லப்படும் அந்த மூன்று நாட்கள் எங்க ஏரியாவில் "தூரம்" என்று வழங்கப்பட்டு வந்தது. ஒரு தரம் ட்யூப் லைட்ன்னா என்ன? அது எப்படி வேலை செய்யுது? சாதா ப்ல்புக்கும் ட்யூப் லைட்டுக்கும் என்ன வித்தியாசம்"ன்னு எங்க தெரு டீச்சரிடம் கேட்க அவர்கள் அவர்களுக்கும் விடைதெரியாது என்பதை "வெரி குட் இப்படித் தான் தெரியலைன்னா பெரியவங்களிடம் கேள்வி கேட்டு புரிஞ்சிக்கனும்"ன்னு முதுகில் தட்டிக் சொல்லிக் கொடுத்த தெம்பில், நாலு விருந்தினர்கள் வீட்டுக்கு வந்திருக்கும் போது அப்பாவிடம் பொதுவில் "தூரம்ன்னா என்னாப்பா...எப்படி ஆவாங்க?"ன்னு எல்லார் முன்னாடியும் நம்ப சந்தேகத்தைக் கேட்டேன். அவரும் பையன் ஐன்ஸ்டீன் மாதிரி கேள்வியெல்லாம் கேக்கிறானே என்று ரொம்ப பெருமைப் பட்டு முதுகில் தட்டிக் கொடுப்பார்ன்னு பார்த்தா கோபம் வந்து நான் என்னம்மோ எல்லார் முன்னாடியும் மானத்தை வாங்கின மாதிரி முதுகில் ரொம்ப பலமாக தட்டிக் கொடுத்து காதைத் திருகிவிட்டார்.

அக்காக்களிடம் கேட்டால் நைன்டி சிக்ஸ் டிவைட்டட் பை சிக்ஸ் என்னவென்று எதிர் கேள்வி கேட்டு இம்போசிஷன் எழுதச் சொல்லி கையை ஒடித்துவிடுவார்கள் என்பதால் மெதுவாக அம்மாவிடம் போய் கேட்டேன். எங்கம்மா நான் என்னம்மோ வயசுக்கு மீறின கேள்விகளை கேட்ட மாதிரி பதறிப் போய்விட்டார்கள். "யாருடா உனக்கு இந்தமாதிரி கேக்க சொல்லிக் குடுத்தாங்க?"ன்னு கேட்க..நான் ரொம்ப பெருமையா ட்யூப் லைட் மேட்டர சொல்லி...சரி போ நீ சொல்லாட்டா நான் அந்த டீச்சர் கிட்டயே போய் கேட்டுக்கிறேன்னு சொல்ல, ஈன்ற பொழுதில் பெரிதுவத்த என் தாய்..." அடப்பாவி இதையெல்லாம் எல்லார்கிட்டயும் கேட்காதடான்னு சொல்லி "அது வந்து கடவுள் ஒரு கல்லை மிதிக்கக்கூடாதுன்னு சொல்லியிருக்கார் அதை தெரியாமல் மிதித்துவிட்டால் அது தான் தூரம் அப்புறம் மூன்று நாட்களுக்கு யாரையும் தொடக்கூடாது வீட்டில் தனியாக இருக்கவேண்டும் என்று உம்மாச்சி (சாமி) கட்டுப்பாடு வைத்திருக்கிறார். ஆனால் இது தேவரகசியம்.. இதப் பத்தி யாருகிட்ட்யும் கேட்க்கவோ சொல்லவோ கூடாது ரகசியமா வெச்சிக்கோன்னு" என்று பதமாக சொல்ல. எனக்கு மேலும் கேள்விகள். அதெப்படி நம்ம வீட்டு பாத்ரூமில தான் கல்லே இல்லீயே அப்புறும் எப்படின்னு எதிர் கேள்வி கேட்க, எங்கம்மா மோர் கடையும் மத்தை திருப்பி பிடித்து தேவரகசியத்தின் பொறுமையின் எல்லை இதுதான்னு ரெண்டு காட்டு காட்ட...அப்புறம் தேவரகசிய சந்தேகங்களை கொஞ்ச நாள் ஒத்திப்போட்டுவிட்டேன்.

ஆனால் ஒருநாள் அவசரமாய் டாய்லெட்டுக்கு கடமையாற்ற சென்று கொண்டிருந்த போது ஓட்டிலிருந்த விழுந்திருந்த கல்லை மிதித்து விட்டேன். "ஐய்யைய்யோ நான் தூரம் ஆகிட்டேன்"ன்னு வீட்டுக்கு வந்து பொதுஅறிக்கைவிட, எங்கம்மா என்ன சொல்வதென்றே தெரியாமல் தலையிலடித்துக் கொண்டு பெருமைப்பட, எங்கப்பா நான் என்னம்மோ அசின் கூட ஓடிப் போகப்போறென்னு சொன்ன மாதிரி கோபப்பட ஆரம்பித்துவிட்டார். சின்ன வயதில் எனக்கு கொஞ்சம் எந்த்தூ ரொம்பவே ஜாஸ்த்தி. வீட்டில் தேள் வந்தாலோ, இல்லை புது சட்டை போட்டாலோ சின்னத்தம்பி பைத்தியம் மாதிரி "எனக்கு கலியாணம் எனக்கு கலியாணம்"ன்னு தெருவில் சந்தோஷமாக அறைகூவல் விடுவேன். அன்றைக்கும், நான் தூரமான மேட்டரை தெருவெல்லாம் அறைகூவல் விட யத்தம் கட்ட, எங்கப்பாவுக்கு தேரடி சுடலைமாடசாமி உடம்பிலேறிவிட்டது. வீட்டு வாசலை நான் எட்டுவதற்குள் எங்கிருந்தோ வந்து ஒரே அமுக்காக அமுக்கி போட்டு, இந்த அறிவு ஜீவியை எப்படி சமாளிக்கிறது என்று அம்மாவும் அப்பாவும் ஒருத்தர் முகத்தை ஒருத்தர் கவலையோடு பார்க்க மீண்டும் சாம தான பேத தண்ட முறைகள் பரீட்சிக்கப்பட்டன.

அந்த தரம் 'தண்ட' முறை மட்டும் கொஞ்சம் பலமாக பிரயோகிக்கப் பட்டதில் உண்மையாகவே அந்த தேவ ரகசியம் பற்றி அப்புறம் ஆர்வக் கோளாறு கொஞ்ச நாள் அடங்கியிருந்தது. இருந்தாலும் like minded peer group knowledge dissemination செசன்ஷில் இது பற்றி விவாதித்தும் எங்கள் அறிவுஜீவித்தனத்திற்கு அப்பாற்பட்டதாக இந்த மேட்டர் இருந்தது. அப்புறம் டீ.வி வந்த காலத்தில் கேர்ஃப்ரீகாரர்கள் புண்யத்தில் கேர்ஃபிரீக்கும் தேவரகசியத்துக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கிறது என்று கண்டுபிடித்தோம். இருந்தாலும் அந்த விளம்பரத்தில் வரும் அம்மாக்களெல்லாம் ப்ரில் இங்க் ஏன் யூஸ் பண்ணுகிறார்கள்? எங்க வீட்டிலாவது ப்ரில் இங்க் வாங்குவார்கள், கண்ணுக்குட்டி கணேசன் வீட்டில் இங்கே வாங்கமாட்டார்களே..இவங்களுக்கெல்லாம் பாத்ரூமில் ப்ரில் இங்க் எப்படி கிடைக்கிறது என்று பலவிதமான சந்தேகங்கள். அப்புறம் இந்த மாதிரி விளம்பரங்களில் பரதநாட்டியம், டேன்ஸ், ஊஞ்சலில் ஆடுவது, ரோட்டில் ஆடுவது என்று குழப்பி எடுத்துவிட்டார்கள். இந்த 'விஸ்பர்'காரர்கள் மட்டும் ஒரு பாப் வெட்டிக் கொண்ட பீட்டர் ஆண்டியைப் போடுவார்கள். அந்த ஆண்டியும் ஐந்து நிமிஷம் கட கடவென இங்கிலிபிஸில் பேசிவிட்டு, கடைசியில் அதுவும் பிரில் இங்க்கை கொட்டிவிட்டுப் போகும். இருந்தாலும் ரகசியம் புலப்படவில்லை. அதிலும் பெண்களின் சுதந்திரத்தை வேறு லிங்க் செய்ய ஆரம்பித்தவுடன் கொஞ்ச நஞ்ச புரிதலும் போயே போச்சு.

அப்புறம் பின்னாளில் இந்த ரகசியம் எப்படியோ தெரிந்தது(எப்படி தெரிந்து கொண்டேன் என்று நானும் யோசித்துப் பார்க்கிறேன் நியாபகத்துக்கு வரமாட்டேங்கிறது). இந்த லட்சணத்தில் தான் சினிமாக்கள் சொல்லிக் கொடுத்த மாதிரி கீழே கவுத்தி கையைக் கோர்த்துக் கொண்டு கசக்கினால் குழந்தை பிறந்துவிடுமென்று ரொம்ப நாள் நினைத்துக் கொண்டிருந்தேன். நல்லவேளை அந்த டவுட்டையெல்லாம் யாரிடமும் கேட்கவில்லை.

Tuesday, June 05, 2007

படிச்சவன் பதிவக் கெடுத்தான்

Desigirl நான் பதியவேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த ஒரு டாப்பிக்கில் போஸ்ட் போட சொல்லி டேக் செய்திருக்கிறார். எனக்குப் பிடித்த இந்திய எழுத்தாளர்கள்/ புத்தகங்கள்

1. நம்ம தலை சாண்டில்யன். திரைப்படம் பற்றி பேசும் போது எனக்குத் தெரிந்த அனைவரையும் பீட்டர் ஜாக்ஸன், லார்ட் ஆஃப் த ரிங்ஸ் பற்றி பேசி நிறைய போரடித்திருக்கிறேன். அதே போல் எழுத்தாளர்களில் நான் வியந்து ஸ்லாகிக்கும் எழுத்தாளர் சாண்டில்யன். இவரின் எழுத்து வசீகரமானது. இவரின் எல்லா நாவலகளிலும் ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் ஒரு சஸ்பென்ஸ் இருக்கும். கடல் புறா, யவன ராணி இரண்டும் எனது மிகவும் பிடித்தமானவை. அடுத்த ஜென்மத்தில் பிறந்தால் சாண்டில்யன் நாவல் கதாநாயகனாய் தான் பிறக்க வேண்டும் என்று பிள்ளையாருக்கு நேர்ந்து கொண்டிருக்கிறேன் (அதுவும் யவன ராணி கதாநாயகனாய்). சாண்டில்யன் ஹிஸ்டரி ஜ்யாக்ரஃபியில் ரொம்ப ஸ்ட்ராங்க். நிறைய ஆராய்ச்சி தகவல்களை பின்புலமாக கொண்டு கதை பின்னியிருப்பார். இவரின் கதாநாயகிகள் ஹூம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ( வெறும் காத்து தான் வருது). தலைவர் எழுதிய ராஜ முத்திரையில் முதல் பாகம் எங்க ஊரில் தான் நடக்கிறது. படிக்கும் போது அட நம்மூரப் பத்தியெல்லாம் தலைவர் எழுதியிருக்கிறாரே என்று அப்படியே சிலிர்த்துவிட்டது. இவர் மட்டும் இப்பொழுது உயிரோடு இருந்தால் எப்படியாவது போய் கண்டிப்பாய் நேரில் பார்த்திருப்பேன். இவரின் பல நாவல்களை இன்னும் படிக்கவில்லை என்பதை நினைக்கும் போதே எனக்கு மிகவும் சந்தோஷமாய் இருக்கும். (அப்போதானே படித்துக் கொண்டே இருக்கமுடியும்). இவரின் புத்தகங்கள் இங்கே எங்க ஊர் லைப்ரரியில் கிடைக்கிறது.ஒவ்வொரு தடவையும் இவரின் புத்தகம் ஏதாவது இருக்கும் எனது லிஸ்டில். மற்றபடி இவரின் நாவல்களை யாராவது தமிழில் படமாக எடுக்க மாட்டார்களா என்று இன்றளவும் ஏக்கமாய் இருக்கிறது.

2.தேவன் - இவரின் எழுத்தும் எனக்கு ரொம்ப பிடிக்கும். வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் இவரின் நகைச்சுவை இருக்கும். இவரின் எழுத்தையும் இன்னும் முழுமையாக படிக்கவில்லை. கிடைக்கும் போதெல்லாம் படித்துக் கொண்டிருக்கிறேன். அந்தக் கால நடையில் இருக்கும் இவரின் நகைச்சுவை நிறைய நேரங்களில் குலுங்க குலுங்க சிரிக்கவைக்கும்.

3. சுஜாதா - தலையப் பத்தி நான் சொல்லவேண்டியதில்லை. இவருடைய பாணி, நடை எல்லாமே அருமையாக இருக்கும். என்னைப் பொருத்த வரையில் இவருக்கும் ஏ.ஆர்.ரகுமானுக்கும் ஒரு ஒற்றுமை. இருவருமே ஒரு புதிய ட்ரெண்டை உருவாக்கினார்கள். பல புதிய முயற்சிகள் செய்திருக்கிறார்கள். சின்ன வயதில் ஊரில் நூலகத்தில் ஒரு புத்தகம் தான் எடுக்க முடியும். அதனால் தெருவில் நாலைந்து வானரங்கள் பார்ட்னர்ஷிப் போட்டுக்கொண்டு புத்தகங்கள் எடுப்போம். இவருடைய புத்தகங்களை ஒன்றுக்கு மேல் பார்த்துவிட்டால் ஒளித்து வைத்துவிடுவோம். அந்த இடம் எங்களுக்கு மட்டும் தான் தெரியுமாகையால் நாங்கள் படிக்கும் வரை வெளியே யாரும் எடுக்க முடியாமல் செய்துவிடுவோம். கடைசியில் ஒரு நாள் லைப்ரரியன் கண்டுபிடித்து வாங்கிக் கட்டிக் கொண்டு அதிலிருந்து நாங்கள் வந்தாலே அட்டெண்டர் பறக்கும் படை மாதிரி கூடவே வந்து நோட்டம் விடுவார். அதெல்லாம் ஒரு த்ரில்.நிறைய பேர்கள் மாதிரி இவருடைய ஸ்ரிரங்கத்து தேவதைகள் எனக்கும் ரொம்ப பிடிக்கும்.

4.கல்கி/ பொன்னியின் செல்வன் - இவருடைய இந்த நாவலின் பிரம்மாண்டம் இன்னும் மனதிலிருக்கிறது. சரித்திர கால நாவல்கள் என்றாலே காத தூரம் ஓடிக்கொண்டிருந்த என்னை (சரித்திர கால திரைப்படங்கள் விஷயமே வேறு இன்னமும் விரும்பிப் பார்ப்பேன் :) ) பொன்னியின் செல்வன் தலைகீழாக மாற்றி விட்டது. பொன்னியின் செல்வன் ஐந்து பாகங்களையும் ஒரே தடவையில் நூலகத்திலிருந்து எடுத்துவந்து கொடுத்த இருப்பத்தி ஓரு நாள் கெடுவில் ஐந்தாம் பாகம் முடிப்பதற்குள் கெடு முடிந்துவிட்டது. ரினியூ செய்வதற்க்கு தடையாக யாரோ ரிசர்வ் செய்திருந்தார்கள். புத்தகத்தை திரும்பக் குடுக்காமல் ஃபைன் கட்டிக் கொண்டே படித்து முடித்து தான் திரும்பக் கொடுத்தேன். பைன் கட்டி படித்த ஒரே புத்தகம் இது ஒன்று தான் இதுவரைக்கும். சிவகாமியின் சபதமும் நன்றாக இருந்தது. ஆனால் பொன்னியின் செல்வன் அளவுக்குப் பிடிக்கவில்லை.

5.ஆர்.கே.நாராயணன் - நான் இங்கிலிபிஸ் புத்தகங்கள் எல்லாம் படிப்பதே இல்லை. ஆனால் முன்னொரு காலத்தில் ட்ரெயினில் ஒரு இங்கிலீஸ் ஃபிகர் ரெகுலராய் வருகிறதே ஃபிலிம் காட்ட தோதாய் இருக்கும்மே என்று ஊருக்கு போயிருந்த போது ஆர்.கே.நாராயணனின் "மால்குடி டேய்ஸ்" வாங்கி வந்தேன். மிக அருமையான புஸ்தகம். என்னை மாதிரி ரெபிடெக்ஸ் விட்டேத்திகளுக்கும் புரியும் படி எளிய ஆங்கிலத்தில் அருமையாக எழுதியிருப்பார். படிக்க ஆரம்த்தவுடனே மிகவும் பிடித்து விட்டது. ஆர்.கே.நாராயணனின் எழுத்து மந்திரத்தில் ஃப்லிம் காட்ட வேண்டிய கடமையை மறந்து உண்மையாக ஊன்றிப் படித்து அந்த ஃபிகரையும் கோட்டைவிட்டேன். பச்சைக்கிளி முத்துச்சரத்துக்கு அப்புறம் மீண்டும் ட்ரெயினில் தமிழ் புத்தகங்களுக்கே மாறிவிட்டேன்.

6. சாவி - வாஷிங்டன்னில் திருமணம் - இதைப் பற்றி கேள்விப் பட்டிருக்கிறேன். சின்ன வயதில் புத்தகங்களில் வருவதைப் பார்த்து தெருவில் மாமிகள் பூரித்து பேசுவதைக் கேட்டிருக்கிறேன். ஆனால் இன்னும் படித்ததில்லை. இங்கு எங்கள் லைப்ரரியில் கிடைக்கவில்லை. யாரவது கடன் தந்து உதவினால் அடுத்த ஜென்மத்தில் நீங்களும் (யவனராணி தவிர்த்த) சாண்டில்யன் நாவல் கதாநாயகனாகவோ/நாயகியாகவோ பிறப்பீர்கள்.

7.பாலகுமாரன் - இவர் புத்தகங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும் என்றெல்லாம் இல்லை. ஆனால் இவரின் நடையில் சில உத்திகள் எனக்குப் ரொம்ப பிடிக்கும். ஆன்மிகமும் அறிவுரையும் மிகைப்பட்டு இருக்கும் இவரின் சில புத்தங்களினால் இப்பொழுது இவர் புத்தகங்களை ரொம்ப படிப்பதில்லை. ஆனால் இதற்கு முற்பட்ட இவரின் சில நாவல்கள் மனதை பிசைந்திருக்கின்றன.

இது தவிர சுபா, பட்டுக்கோட்டை பிரபாகர், இந்திரா சௌந்தர்ராஜன், ராஜேஷ்குமார், பாலகுமாரன் என்று எல்லாரையும் படிப்பேன்.

இந்த சந்தர்ப்பத்தில் இன்னுமொரு விண்ணப்பம் சிவாஜி நடித்த "ராஜ ராஜ சோழன்" படம் எங்காவது டவுண்லோட் செய்யக் கிடைக்குமா? நானும் இந்த டி.வி.டிக்கு நாயா பேயா அலையறேன் கிடைக்க மாட்டேங்குது.

மற்றபடி உங்கள் ஆர்வங்களையும் உங்களுக்கு பிடித்த புத்தகங்களையும் அறிய ஆவலாய் உள்ளேன். உங்கள் பதிவிலோ/ பின்னூட்டத்திலோ தெரிவியுங்களேன். உங்களுக்குப் பிடித்த வித்தியாசமான புத்தங்களையும் தெரிவியுங்களேன். சந்தர்ப்பம் கிடைக்கும் போது படிக்க வசதியாக இருக்கும்! நன்றி.

Thursday, May 24, 2007

சையன்ஸ் பிக்க்ஷன் மாதிரி..

மு.கு- இந்தப் பதிவு ரொம்ப நாள் முன்னாடி வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் அட்லாஸ் வாலிபராய் இருந்த போது(அவங்க போறாத நேரம்) எழுதியது. இங்கே மறு பதிப்பு செய்துகொள்கிறேன்.
***************************

“உட்காருங்கள்..இன்னும் பத்து நிமிஷத்தில் பிரசாத் உங்களை அழைப்பார்” - எல்லா ஆஸ்பத்திகளிலும் வழக்கமாய் சொல்லுவது போல் டாக்டர் என்று சொல்லாமல் பிரசாத் என்று அந்த அழகுப் பதுமை சொன்ன போது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது.

“ஒருவேளை டாக்டருக்கும் ரிசப்ஷனிஸ்டுக்கும் ஒரு இது இருக்குமோ?” அவன் மனம் நதிமூலம் ஆராய முற்பட்ட போது ஒரு அதட்டு போட்டு மனதை அடக்கிக் கொண்டான். அவள் இவன் நினைப்பதையெல்லாம் பற்றி அலட்டிக் கொள்ளாமல் ஐஸ்குச்சி மாதிரி எதையோ வைத்துக் கொண்டு நளினமாய் நகத்தை ராவிக் கொண்டிருந்தாள்.

ஒரு கடி கடிச்சு இழுத்து துப்பி எறியாமல் ஏன் இந்த இழவ இப்படி சிங்காரித்துக் கொண்டிருக்கிறாள் என்று அவனுக்கு எரிச்சலாக வந்தது. நல்லவேளை அவன் பொறுமையை இழப்பதற்கு முன்னால் பிரசாத் உள்ளே அழைத்துவிட்டார்.

“ஹலோ டாக்டர்…ஐ ஆம் சந்திரா”

“சந்திரா நீங்க என்னை பிரசாத்னே கூப்பிடலாம்..டாக்டர் எல்லாம் அவசியம் இல்லை”

“ஏன் நீங்க இன்னும் டாக்டர் பரீட்சை பாஸ் பண்ணவில்லையா?”

“ஹா ஹா குட் ஒன். சொல்லுங்க…ஹௌ கேன் ஐ ஹெல்ப் யூ?”

“மிஸ்டர் பிரசாத் எனக்கு கொஞ்ச நாளா ஒரு பிரச்சனை. சாரி இது பிரச்சனையான்னே எனக்குத் தெரியாது…எதுக்கும் ஒரு ஒபினியன் கேட்கலாம்னு தான் வந்திருக்கேன்” - சொல்லிக் கொண்டே கொண்டுவந்திருந்த பையிலிருந்து அந்த அழகான கடிகாரத்தை எடுத்து மேஜை மேல் வைத்தான். அழகிய வேலைப்பாடுகளுடன் பந்து வடிவத்திலிருந்த அந்த டிஜிட்டல் கடிகாரம் பேக்லிட்டில் கண்ணைச் சிமிட்டிக் கொண்டிருந்தது.

“வாவ் அழகா இருக்கே..கண்டிப்பா நம்மூர்ல செஞ்சது இல்லை போலிருக்கே…அமெரிக்காவா ஐரோப்பாவா இல்லை சைனாவா?”

“எனக்குத் தெரியாது மிஸ்டர் பிரசாத். இது என்னோட நண்பன் கிட்டேர்ந்து என்னிடம் வந்தது. பிரச்சனையைக் கேட்டால் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள். என் நண்பன் ராகவ் இதை மூன்று மாதங்களுக்கு முன்னால் எடுத்துக் கொண்டு என்னிடம் வந்தான்…அவனுக்கு கிஃப்டாக வந்ததாம் இந்த கடிகாரம்” அவன் சொல்லிக் கொண்டே அடிக்கடி அந்தக் கடிகாரத்தை பத்து நொடிக்கொருமுறை பார்த்துக் கொண்டான்.

“மிஸ்டர் சந்திரா இந்தக் கடிகாரம் உங்கள் கவனத்தை திசை திருப்புகிறது என்று நினைக்கிறேன். இதை சொல்லி முடிக்கும் வரையில் நாம் தவிர்க்கலாமே” பிரசாத் தனது கைக்குட்டையினால் அந்தக் கடிகாரத்தை மூடினான்.

“யெஸ் பிரசாத் யூ ஆர் ரைட். கொஞ்ச நாளாக நான் இந்த கடிகாரத்தை பார்க்கும் போதெல்லாம் ஒரு விநோதமான பிரச்சனை. நான் பார்க்கும் போதெல்லாம் நேரம் யுனீக்காக இருக்கிறது. 12:12, 10:10, 07:07, 12:34 இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்..”

“ம்ம்..அது உங்கள் மனதை உறுத்துகிறது ரைட்?”

“எக்ஸாட்லி”

“இதில் சலனப்படுவதற்கு ஒன்றும் இல்லை சந்திரா..இது ரொம்ப நார்மல்..ஜஸ்ட் கோ இன்ஸிடென்ஸ்…இந்தக் கடிகாரத்தின் அழகு உங்களை கவர்ந்திருக்கலாம்..அதனால் நீங்கள் இதை அடிக்கடி பார்த்துக் கொண்டிருக்கலாம்…நீங்கள் பார்த்துக்கொண்டிருந்த நேரங்கள் அந்த வித்தியாசமான நொடிகளாய் இருந்திருக்கலாம்…இந்த விபரங்களை ஒரு முதுகலை கணித மாணவனிடம் கொடுத்தால்..கணக்கு போட்டு உங்களுக்கு இது நிகழக் கூடிய ப்ராபபலிட்டியை சொல்லிவிடுவார்கள். ரொம்ப சிம்பிள் உங்களை மாதிரி நானும் பார்த்துக் கொண்டிருந்தால் எனக்கும் நிகழக் கூடியது தான் இது”

“எனக்குப் புரிகிறது டாக்டர். என் நண்பன் இதைக் கொடுத்தான் என்று சொன்னேன் அல்லவா…அவனுக்கு இதே பிரச்சனை என்று சொல்லி தான் என்னிடம் வந்தான். நானும் நீங்கள் சொன்ன மாதிரியான விளகத்தைச் சொல்லி தான் இந்தக் கடிகாரத்தை வாங்கிக் கொண்டேன் “

“ஹூம்…வெல்டன் அப்புறம் என்ன…”

“என் நண்பன் கூடுதலாக ஒரு விபரம் சொன்னான். நான் முன்பு சொன்ன நேரங்கள் தவிர்த்து அவனுக்கு 99:99 என்ற நேரமும் அடிக்கடி தெரிவதாக சொன்னான். அது தான் கொஞ்சம் இடித்தது. நானும் கடிகாரத்தில் கோளாறு இருக்கலாம் என்று அவனிடமிருந்து வாங்கி வைத்தேன். இதுவரை நான்கு கடைகளில் கொடுத்து செக்கப் செய்தாயிற்று. கடிகாரத்தில் பிரச்சனையே இல்லை என்று சொல்லிவிட்டார்கள். அவன் சொன்னதை சரிபார்ப்பதற்காக நானும் அடிக்கடி கடிகாரத்தை நோட்டம் விட ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் நார்மலாகத் தான் இருந்தது. ஆனால் இப்போதெல்லாம் எனக்கும் அடிக்கடி 99:99 தெரியா ஆரம்பித்து இருக்கிறது..அதான் உங்களைப் பார்க்க வந்திருக்கிறேன்”

“இன்ட்ரெஸ்டிங்…ம்ம்ம்….ஹாலூசினேஷன் என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா?”

“கேள்விப் பட்டிருக்கிறேன்…”


“மாயை..சில சமயம் நமது மனம் மூளை இவை விசித்திரமாக செயல்படும். நமது மூளை இருக்கிறதே..அதன் அமைப்பு அவ்வளவு விந்தையானது, சிறப்பானது. மருத்துவ உலகின் மிக முக்கியமான ஆராய்ச்சிகளில் ஒன்று மனித மூளையின் செயல்பாடுகளை புரிந்து செயல் படுத்த முயன்று கொண்டிருக்கும் ஆராய்ச்சி. எந்த அளவில் என்று தெரியுமா? லட்சத்தில் ஒரு பங்கு கூட கிடையாது. இதில் ஒரு பகுதியையாவது கிழித்துவிடுவோம் என்று ஐ.பி.எம்மும் ஸிவிஸ் விஞ்ஞானிகளும் இறங்கி இருக்கிறார்கள், ஆனால் இன்னும் நம்பிக்கை பிறக்கவில்லை. எதற்கு சொல்கிறேன் என்றால் இந்த ஹாலுசினேஷன் என்பது மூளையின் பில்லியன் கணக்கான ந்யூரான்களில் ஏற்படும் ஒரு கெமிக்கல் எஃபெக்ட். சில பேருக்கு குரல்கள் கேட்கலாம்..சில பேருக்கு உருவங்கள் தெரியலாம். அந்த மாதிரியாக உங்கள் நண்பர் சொன்னதிலிருந்து நீங்கள் கடிகாரத்தையே பார்த்துக் கொண்டிருப்பத்னால் வந்த விளைவு தான் இது. கவலையே படாதீர்கள்…நீங்கள் மிக மிக ஆரம்ப கட்டத்தில் தான் இருக்கிறீர்கள். குணப்படுத்திவிடலாம். ஆனால் அதற்கு முன்னால் உங்களை இன்னும் தரோவாக செக்கப் செய்யவேண்டும்

“எனக்கு என்னமோ இது அது மாதிரி தெரியவில்லை டாக்டர்”

“சந்திரா நான் சொன்ன மாதிரி நீங்கள் மிக மிக ஆரம்ப கட்டத்தில் இருக்கிறீர்கள் என்று நான் சந்தேகம் தான் படுகிறேன். நான் சில டெஸ்டுகள் எடுத்துப் பார்த்து விட்டால் அதுவும் தெரிந்துவிடும்…என்ன சொல்லுகிறீகள்”

“செலவு..”

“நிறைய ஆகாது வெறும் டெஸ்டுகள் தான்…நீங்கள் நாளை காலை வாருங்கள்..அதற்கு முன்னால் இந்த கடிகாரத்தையும் எனக்குத் தெரிந்த இடத்தில் கொடுத்து சோதித்து பார்த்துவிடுவோம்..கடிகாரம் தான் பிரச்சனை என்றால்…ரிப்பேர் சார்ஜ் மட்டும் கொடுங்கள் போதும் என்ன..ஹா ஹா”

சந்திரா அந்த ஜோக்கை அவ்வளவாக ரசிக்கவில்லை என்பது அவன் கவலை தோய்ந்த முகத்துடன் கிளம்பிச் சென்றதிலேயே தெரிந்தது.

“பிரசாத் இன்று நீங்கள் மிஸ்டர் ரெட்டியை சந்திப்பதாக சொல்லியிருக்கிறீர்கள்” ரிசப்ஷன் பதுமை பதவிசாக வந்து நியாபகப் படுத்தியபோது பிரசாத் அந்த மெடிகல் ஜார்னலில் ஆழ்ந்திருந்தான்.

“ஓ மை காட் மறந்தே போய்விட்டேன்…இதோ கிளம்புகிறேன்…இன்றைக்கு வந்த ஆள் நாளை மீண்டும் வருவான்…அவனுக்கு இனிஷியல் டெஸ்ட் ஒன்று செய்ய ஏற்பாடு செய்துவிடு..ஆரம்ப கட்டமாய் தான் தோன்றுகிறான்..பார்ப்போம்”

டாக்டர் பிரசாத் பக்கத்திலிருந்த பாத்ரூமில் முகம் கழுவிப் புறப்பட்டான். கைக்குட்டையை எடுத்துக் கொண்டு கிளம்பும் போது கண் அநிச்சையாய் சந்திராவின் கடிகாரத்தில் மணி பார்த்தது…துல்லியமாக 99:99 என்று அவனைப் பார்த்து கண்சிமிட்டியது.

பி.கு - இந்தப் பதிவ படிச்சிட்டு சாவித்திரி வாடை வருது சுஜாதா வாடை வருதுன்னு பின்னூட்டம் போடாதீங்க இப்போவே சொல்லிப்புட்டேன்…போதும் நிறுத்திகிரலாம் :)

Wednesday, May 16, 2007

கல்யாணம்

நீ கல்யாணி தானே...ஏன்டி பார்த்து எம்புட்டு நாளாச்சு..நல்ல இளைச்சுட்டியேடி..ஏது ஒன்னோடு போறும்ன்னு நிப்பாட்டியா இந்தக் காலத்துல எல்லாரும் ரெண்டு பெத்துக்கறாளேடி...

என்னோடு வெள்ளைக்கல் ஜிமிக்கியப் பார்த்தேளா...மண்டபத்துக்கு கிளம்பும் போது இந்தப் பையில தான் போட்டுவைச்சேன்...சிண்டு தான் பைய நோண்டின்டு இருந்தது..கொஞ்சம் தேடிக் குடுங்களேன்

நீங்க தான் காண்டிராக்ட்டா...காசியாத்திரை குடை சின்னதா இருக்கே...நல்ல பெருசா வாங்க வேண்டாமா...பட்டுப் பாயெல்லாம் நல்ல வாங்கியிருக்கேளா...காட்டுங்கோ பார்க்கட்டும்

ஏன்டா அந்தப் பையனோட ஏடாகூடமா பேசிண்டு இருந்தியா சித்திப்பாட்டி வந்து உம்பிள்ளை இந்த வயசுலயே பம்பாய் செக்ஸப் பத்தி பேசிண்டு இருக்கான்னு குண்டத் தூக்கிப் போட்டுட்டு போறா?

ம்ம்..அந்த குண்டத் தூக்கி உன் சித்திப்பாட்டி மண்டையில போடு பாம்பே சென்செக்ஸும் ஒரு விதமான செக்ஸுன்னு நினைக்கிறா பாரு....இந்த வயசுல அந்தக் கிழத்துக்கு இதெல்லாம் தேவையா..ஓரமா உட்கார்ந்து ராம ராம சொல்லச் சொல்லு புண்யம் கிடைக்கும்

எத்தன தடவை சொன்னேன் இந்தப் புடவை வாங்காதேன்னு ...உன் கலர் கம்மியா காட்டறதுன்னு...அங்க பாரு எல்லாரும் எப்படி ஜம்முன்னு வந்திருக்கான்னு..அந்த பச்சைக் கலர் புடவை சூப்பரா இருக்கு இல்ல், இந்த மெருன் கூட ரொம்ப நல்லா இருக்கு....அந்த பர்பிள் அடிச்சிக்கவே முடியாது அம்சமா இருக்கு

போதும் போதும் புடவைய கிரிட்டிசைஸ் பண்றேன்னு எல்லாரையும் நைசா பார்த்து ரசிச்சது...புடவை தான் நீங்க சொன்னத வாங்கலையே தவிர உங்களுக்கு பிடிச்ச செருப்பு தான் போட்டுண்டு வந்திருக்கேன்

அட போடா ஒன்னும் தேற மாட்டேங்குது...போனவாரம் ஒரு குஜ்ஜூ கல்யாணத்துக்கு போயிருந்தேன்...புடவைய கட்டினா கூட மாராப்ப அந்தப் பக்கமா போட்டு என்ன ஸ்டைலு....இட்லி இட்லிதான் சப்பாத்தி சப்பாத்தி தான்..துக்டா துக்டாவா போட்டுக்கிட்டு பாட்டென்ன ஆட்டமென்ன பட்டயக் கிளப்பிருச்சில்ல..எல்லாரையும் கட்டிப்பிடிச்சி இல்ல வரவேற்கிறாங்க...இதமாதிரியா வணெக்கெம்ம்ம்ம்ம்ன்னு கையக் கூப்பிறாங்க..

மாமி உங்களுக்கு மடிசார் கட்டிவிடத் தெரியுமா...சித்த கல்யாணப் பொண்ணுக்கு கட்டிவிட்டுங்கோளேன்...யாரோ கட்டிவிட்டு துணியடைச்ச சோளக்கொல பொம்மை மாதிரி இருக்கா...

ஏன்னா அங்க ரூம்ல இருக்காளே அதான் என்னோட ஒன்னு விட்ட அத்தை

நினைச்சேன்...அடேயெங்கப்பா...உருளக்கிழங்கு போண்டாவ தின்னுட்டு....அங்க அடிச்ச கப்புக்கு உங்க அத்தை ஒன்னு விட்டிருக்கமாட்டாங்க ரெண்டு மூனு விட்டிருக்கனும்...என்னா நாத்தம்டா சாமி...மனுஷன் மூக்கு மசிரெல்லாம் கருகிப் போச்சுல்ல...

சீ...நான் என்ன சொல்றேன் நீங்க என்ன..பேசறீங்க அத்தை காதுல விழுந்திடப் போகுது.

என்ன...மாப்பிள்ள என்னைப் பத்தி ஏதோ சொல்றார் போல இருக்கே...

இல்ல...நான் இல்ல அத்தை உங்க பொண்ணு தான்...- இது தான் எங்க 'ஒன்னு' விட்ட அத்தை...'ஒன்னு' விட்ட அத்தைன்னு உங்களப் பத்தி மண்டபம் ஃபுல்லா நாற அடிக்கிறா..

மாப்பிள்ளை ரொம்ப தமாஷ் பேர்வழிபோல இருக்கே...இருக்கட்டும் இருக்கட்டும்

ஆமாமா இருகட்டும்...இருக்கட்டும்.அத்தை எதுக்கும் நீங்க கொஞ்சம் அடக்கி வாசிங்கோ....

ஏன்டா கிச்சு உன்னை எங்கெல்லாம் தேடறது....மாப்பிளை இந்த பிராண்டு செண்ட் தான் யூஸ் பண்ணுவாராம் ஓடிப் போய் ஸ்பென்சர்ல வாங்கிண்டு வந்திரு

அடப்பாவிங்களா...ஸ்பென்சர் வரைக்கும் கிச்சு ஓடனுமா.....ஏன்டி உங்க வீட்டுல நம்ம கல்யாணத்துக்கு தண்ணில ரெண்டு சொட்டு பன்னீர விட்டு லோக்கல் பாட்டில்ல அடைச்சு வைச்சு செண்டுன்னு ஏமாத்தினீங்களே அதெல்லாம் இப்போ இல்லையா...திருந்திட்டீங்களா...

இங்க மாப்பிள்ளைய பார்த்தீங்கல்ல...எல்லாம் ரேஞ்சுக்கு ஏத்த மாதிரி தான் வைப்போம்... உங்க மூஞ்சிக்கு பன்னீர் பாட்டிலே ரொம்ப அதிகம்.

ஏம்பா வேஷ்டி கட்டிக்கோ...கட்டிக்கோன்னு படுத்தற நீ பாட்டுக்கு கட்டி விட்டுறுவ அவுந்தா அப்புறம் உன்னை நான் எங்க தேடறது? இதே மாதிரி படுத்தினியான்னா அப்புறம் ஒன்னு விட்ட அத்தைகிட்ட மாட்டிவிட்டுறுவேன்.

சார் அங்க மாப்பிள்ளை சொந்தக்கார ரூமுக்கு அனுப்பின காப்பில சர்கரையே இல்லையாம்...கொஞ்சம் பார்த்து சொல்லி அனுபுங்களேன்...

நம்ப மல்லிகா புள்ளை அமெரிக்கால இருக்கானாம் வரன் பார்த்திண்டு இருக்கா...ரொம்ப நல்ல பையன்..கை நிறைய சம்பளம்.அமெரிக்கால அவாத்து கொல்லைக்கதவ திறந்தா புஷ்ஷோடு ஆம் தெரியும்ன்னா பார்த்துக்கோங்கோளேன்...நம்ப வசுந்த்ரா ஜாதகத்தை தாங்கோ நானாச்சு முடிச்சுவைக்கிறேன்.

ஏன்டி பர்ஸ்ட் நைட்டு ஹோட்டல்லயாமே...ரொம்ப நன்னா டெக்கரேட் பண்ணுவாளாமே...எங்க காலத்துல எங்களுக்கெல்லாம் வீட்டு மாடியிலதான்...அதுவும் நெல்லு மூட்டைய ஓரமா வெச்சுட்டு பூ போட்டு வைச்சிருப்பா..அங்க தான் எல்லாமே ஹூம்....

விசாலம்...பொண்ணுக்கு எல்லாம் சொல்லிக்குடுத்திருக்கியோ...பதவிசா நடந்துபாளொன்னோ..

பாட்டி அதெல்லாம் உங்ககாலம்....நம்ம ராது சும்மா புகுந்து விளையாடிடுவா..ஏண்டி ராது அப்படிதானே..?

போடா அந்தப் பக்கம்...பொம்மனாட்டிகள் இடத்துல ஆம்பிளங்களுக்கு என்ன வேலை...

என்னடா மச்சான் கல்யாணத்துக்கு கவனிக்கவே மாடேங்கிற வாட்டர் பார்டி ஒன்னும் கிடையாதா...

டேய் மெதுவா பேசுடா சித்தப்பா காதுல விழுந்திடப் போகுது ராத்திரி மொட்டைமாடில பசங்களோடு ஏற்பாடு ஆகியிருகுடா..கலக்கிடுவோம்...வாங்கி வைச்சாச்சில்ல...

ஏன்டா உன் சித்தப்பா ரொம்ப ஜாலின்னு நினைச்சேன்..ஸ்ட்ரிக்ட்டா?

போடாங்க...அவரு கவுத்தினார்னா உனக்கு பாட்டில் தான் மிஞ்சும்...மடாக் குடியன்டா கட்டுப்படியாகாது..பெருசுங்களலாம் தனியா போகுதுங்க...லூஸுல விடுடா...உளறிக் கவுத்திறாத

ஏன்டி சித்ரா உன் புருஷன் உன்னையே சுத்தி சுத்தி வராறே என்ன சொக்குப் பொடி போட்டு வைச்சிருக்க...

சித்ரா என்ன சொக்குப் பொடி போட்டான்னு நான் சொல்லட்டுமா...&(*£&£&^&£^%&!^ !&"!^"^ &*£&%£$£^& £*"^! %£&£^%&$*$^ ^$!^"%!"&

இப்படித் தான் போன தரம் உஷா ஊட்டி டூருக்கு போன போது..&"*(*&"£(*(&£ $$"£^^!^"*&& ஏன்டி உஷா அந்தக் கதைய சொல்லேன்...

ஏன் எனக்கு உங்க கதை தெரியாதே....இவ டெய்லி &*&£&**!*" ^*&!&"*!"& %&^^&*!^"*& ^&&^!*

எல்லா ஆம்பிளங்களும் இப்படி தான் &£(£&£&$&^$&**!*&£&!&&"

எந்தக் காலத்துலடி இருக்க இப்போல்லாம் &*&**"&*£"& &£ ^$&& $*$£ £$$!££$" £&£&$&^$&**!*&

%^*&£^£&&£ பொண்ணுங்களுக்கு&&*&£ காலம்பற &&(*£"(*^£&

ஏன்டி கல்யணமான பொண்ணுங்க மாதிரியாடி பேசறீங்க...கொஞ்சம் கூட வெட்கமே இல்லாம..

ஏய் இவள யாருடி இங்க விட்டா...ஏய் நீ போய் உன் வயசு கல்யாணமாகத பொண்ணுங்களோடு போய் சைட் அடி போ இங்க எல்லாம் வராத....

ஏன்டி சுஜா அங்க அவாளுக்கெல்லாம் தலகாணி வந்திருக்கான்னு பாரு...இல்லைன்னா எடுத்துக் குடு..மசமசன்னு நிக்காத

ஏன் உன் சீமந்தப் புத்ரன எங்க...கூப்பிட்டு சொல்லவேண்டி தானே...

ஏன்டி ராகவ் நேத்திலேர்ந்து ஓடியாடி எம்புட்டு வேலை பண்ணினான்...இப்போ கூட ராதுவ கொண்டுவிடறதுக்கு கூடப் போயிருப்பான்..

ஆஹாஹா....ரொம்ப தேறிட்டமா...பாசத்துல மெகாசீரியல் அம்மாவையும் மிஞ்சிருவ...மண்டபத்து டெரெஸ்ல போய் பாரு உம்பிள்ளை சரக்கடிச்சுட்டு பிரெண்ட்சுகளோடு மிதந்துண்டு இருப்பான்...சே என்ன பொழப்புடா இது கிழங்களுக்கு தலைகாணியக் குடு போர்வையக் குடுன்னு...நானும் இனிமே பாட்டிலடிச்சிட்டு மட்டையாயிடப் போறேன்..

சத்தம் போட்டுத் தொலையாதடி..பாட்டி காதுல விழுந்திடப் போறது..


ஏன்டி ராது எல்லாம் நல்லபடியா நடந்துதுல்ல?...சந்தோஷமா இருந்தியா?

ம்ம்...என்னம்மா வெவஸ்தையே இல்லாம இதெல்லாம் கேட்டுண்டு...எம்பராஸ் பண்ணாத...

ஹேய் கல்யாணப் பொண்ணு வாம்மா கண்ணு..உன்னைத் தான் காலைலேர்ந்து தேடிக்கிட்டு இருக்கோம். மாட்னடி மவளே ..நீங்க போங்கம்மா நாங்க கேட்டுக்கிறோம். என்னாடி பையன் எப்படி..? தேறுவானா...?..கழுத்தக் காட்டு பார்ப்போம்..எங்கெல்லாம் என்ன பண்ணியிருக்கான்ன்னு பார்ப்போம்

ஏய் போங்கடி....உத படப் போறீங்க....

புளியோதரை, சாம்பார் சாதம், தயிர் சாதம் எல்லாம் பேக் பண்ணி தனித் தனியா டப்பால போட்டு இன்டிவிஜுவலா போட்டிருக்கோம். வழியில பஸ்ஸுலயே சாப்பிட வசதியா எல்லாத்துக்கும் ஸ்பூனும் போட்டிருக்கோம். வாட்டர் பாட்டிலும் இருக்கு. வசதியா இருக்கும்.

விசாலம் கண்ணு கலங்காத பொண்ண அனுப்பி வைக்கனும்...கடல் தாண்டி போறா, போற இடத்துல நன்னா இருக்கனும்..சிரிச்ச முகத்தோடு அனுப்பு...அதுவும் சின்னது நீ கண் கலங்கினா அப்புறம் அதுவும் கழுத்த கட்டிண்டு அழும்.

அழாத ராது...ப்ளைட் ஏறறதுக்கு நாங்க ஏர்போட்டுக்கு வருவோம்... என்னென்ன ஊருக்கு எடுத்துண்டு போகனும்ன்னு அப்புறம் வாக்கா சொல்லு அம்மா பேக் பண்ணி வைக்கிறேன் என்ன

இதுல அப்பளம் வைச்சிருக்கேன்...ராகவ் பிரெண்டு அங்க தான் எம்.எஸ் பண்றானாம் வந்து பார்த்துக்கிறேன்னு சொல்லியிருக்கானாம். அடிக்கடி ஃபோன் பண்ணு என்ன...யாராவது வந்து போறதான்னா சொல்லு எதாவது குடுத்துவிடறேன்....உடம்ப பார்த்துக்கோடி வேளா வேளைக்கு சாப்பிடு என்ன...

டேய் ...அந்த ப்ரீத்தி பின்னாடியே துப்பட்டாவ பிடிச்சிண்டு சுத்திண்டு இருக்காத ஒழுங்கா படி என்ன...சீகிரமே நீயும் அங்க வந்திரு...என்ன..

அம்மா இங்க இப்ப ஒரே குளிர்..நீ இங்க வந்துட்டு போனதுக்கு அப்புறம் சிண்டு உன்ன ரொம்ப தேடறான்...அடிக்கடி ஏங்கி ஏங்கி அழறான்.....ஜூன்ல நாம ராகவ் மாமா கல்யாணத்துக்கு போறோம்ன்னு சொல்லி சமாதானம் பண்ணி வைச்சிருக்கேன்..

நீ ராது தானே...ஏன்டி பார்த்து எம்புட்டு நாளாச்சு..நல்ல இளைச்சுட்டியேடி..ஏது ஒன்னோடு போறும்ன்னு நிப்பாட்டியா இந்தக் காலத்துல எல்லாரும் ரெண்டு பெத்துக்கறாளேடி...

என்னோடு வெள்ளைக்கல் ஜிமிக்கியப் பார்த்தேளா...மண்டபத்துக்கு கிளம்பும் போது இந்தப் பையில தான் போட்டுவைச்சேன்...சிண்டு தான் பைய நோண்டின்டு இருந்தது..கொஞ்சம் தேடிக் குடுங்களேன்

....
...
....